பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபூரண ஒத்துழைப்புக் கிடைத்தால் மட்டுமே பத்திரிகை யைத் தொடர்ந்து நடத்த முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரஸ்வதியின் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு வாசக நண்பரையும் உடனே சந்தாதாரர் ஆவதோடு தன் நண்பர் ஒருவரையாவது சந்தா தாரராகச் சேர்த்து உதவக் கோருகிறேன்,

சரஸ்வதியின் லட்சியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள், அது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்பும் நேயர்கள் உடனடியாக சகல விதத்திலும் உதவ வேண்டு மெனக் கோருகிறேன்.

பத்திரிகை நடத்துவதிலும், சரஸ்வதியின் இலக்கியப் பணி யிலும் எனக்குப் பெருமிதம் நிறைய உண்டு என்பது உண்மை. எனினும் நான் சலித்துவிட்டேன். சக்திக்கு மீறி நஷ்டப்பட்டு விட்டேன் என்பதால் மன உளைச்சலும் சேரர் வும் சேர்ந்து பத்திரிகையை நிறுத்த வைத்து விடுமோ என்று அஞ்சுகிறேன். வாசகர்களேயும் நண்பர்களேயும் அறை கூவி அழைப்பதன் மூலம், தமிழில் ஓர் சிறந்த இலக்கியப் பத்திரிகை மறையாமல் நின்று புகழ் தரும் என்ற நம்பிக்கை யோடு எல்லாவற்றையும் மனம் விட்டு எழுதி இருக்கிறேன். இனி, நானும் உங்களில் ஒருவன். இந்த உணர்வு எனது நண்பர்களான உங்களுக்கும் ஏற்பட்டால் பத்திரிகை உண்டு. இல்லாவிட்டால்?.... நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்”. வ. விஜயபாஸ்கரன்.

ஆயினும், இம்முறை சரஸ்வதி நின்று விடவில்லை. ஜூன் மாதம் மட்டும் பத்திரிகை வராமல் நின்றிருந்தது.

மலர் ஆறின் 7வது இதழ் 15- 7- 59 தேதியிடப் பெற்று வெளிவந்தது. நிலப்பிரபுத்துவ, பிற்போக்கு வகுப்பு வாத சக்திகள் தொடுத்துள்ள தாக்குதலை அமைதியாகச் சமா ளித்து தேசநலன் காத்து, தீயசக்திகளே புறம்காணும் தீரர்,

[...] வல்லிக் கண்ணன் / 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/169&oldid=561251" இலிருந்து மீள்விக்கப்பட்டது