பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்தது: வன. க.ை வின் உதிரிப்பூக்கள் இது புதுமை யான முயற்சி.

அதற்கு முன்னுரை போல் அமைந்த ஆரம்பப் பகுதி இது தான்

"படிப்பதும் எழுதுவதும் என்னுடைய தொழில் அல்ல. அது வே எனது உயிர்மூச்சு.

"உங்களால் இப்போ கூட அதிகமாகப் படிக்க முடிகிறதா? புத்தகங்களேப் படிக்க வேண்டும் என்கிற ஆசை இன்னும் உங்களுக்கு இருக்கிறதா? லா. ச. ராமாமிர்தம் சமீபத்தில் என்னிடம் கேட்டார்.

  • இருக்கிறது. அதிகமாகவே இருக்கிறது. உலகத்தில் வெளி யாகி, பலரது கவனிப்பையும் பரபரப்பையும் பெறுகிற பல புத்தகங்களை உடனுக்குடனே படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லேயே என்ற வருத்தம் கூட எனக்கு உண்டு என்று சொன்னேன். -

"படிக்கணும்கிற அவா எனக்கு இப்போல்லாம் இல்லே. புத்த கங்களைப் படிக்க முடிவதில்லே’ என்று லா. ச. ரா. கூறினுர், "படிக்கும் அவா வை வெல்லும் திறன் எனக்கு இல்லை. நான் படித்தது சில அலமாரி அளவு; படிக்காதது உலகளவு! படிக்கும்போது எவ்வளவோ சுவையான சிந்த&னகளும், புதிய புதிய விஷயங்களும் எனது அறிவு வலேயிலே அகப் பட்டிருக்கின்றன. எல்லோரும் எல்லாப் புத்தகங்களையும் படித்து விட முடியாது. அது தேவையுமல்ல; சாத்தியமு மல்ல.

நான் உணர்ந்த நயங்களிலும், நினைத்த எண்ணங்களிலும் ஒரு சிலவற்றை இலக்கியப் பசி உள்ளவர்களுக்கு விருந்தாக அளிக்க முன் வந்திருக்கிறேன். இது போர் அடிக்கும் முயற்சிஅல்ல; போருக்கு வரிந்து கட்டும் நாவலிப்பும் இல்லை!"

சுவையான, சூடான, குதர்க்கமான இன்னும் பல ரகமான

口 வல்லிக் கண்ணன் 165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/171&oldid=561253" இலிருந்து மீள்விக்கப்பட்டது