பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணங்கள் உதிரிப் பூக்கள்’ ஆகத் தொகுத்தளிக்கப் பட்டன.

புதுமையான வேருெரு விஷயமும் இந்த இதழில் இடம் பெற்றது. சில மாதங்களாக சரஸ்வதியில் கதை எழுதி வந்த ஜி. நாகராஜன், யாரும் கேட்டு விட்டால்? என்று ஒரு க்விஸ் தயாரித்து வெளியிட்டார். கேள்விகளையும் தகவல் களேயும் அவர் எழுதியிருந்த முறை சுவாரஸ்யமாக இருந் தது.

தோற்கமாட்டோம் என்று விஜயபாஸ்கரன் ஒரு தலையங் கம் எழுதினுர்"சரஸ்வதி தொடர்ந்து ஆற்றி வரும் இலக்கியப்பணியில் எதிர்நோக்கி நடைபோடும் அதன் லட்சியத்தில், தேங்கி விட்டதோ, தேக்கப்பட்டு விடுமோ தோற்றுவிட்டதோ தோற்கடிக்கப்படுமோ என்ற ஐயம் சென்ற மாதத்தில் நமக்கு எழுந்தது. அதன் விளேவே சென்ற இதழில் நாம் எழுதிய தலையங்கம்.

"எங்களுக்கும் லட்சியம் உண்டு, நாங்களும் எதையோ சாதிக்கப் போகிருேம்’ என்றெல்லாம் வாய்ப்பந்தல் மட்டும் போடாமல், உண்மையிலேயே லட்சியத் தாகத்தோடு, மனத்தில் கனக்கும் ஆசை வெறியில், தோளில், கிடந்து அழுத்தும் பொறுப்பென்னும் சுமையோடு, தானே வகுத்துக் கொண்ட தனி வழியில் நடைபோடும் எவருக்கும் இப்படிப் பட்ட அச்சம் ஏற்படுவது நல்லது; ஏற்பட வேண்டும். நமக்கு ஏற்பட்டதும் அதுதான் . வாசகர்கள் இதை- இந்த அச்சத்தை- நாம் உண்மையிலே வளருகிருேம் என்பதற்கு அறிகுறியாக ஏற்றுக் கொள்வார் களாக, நமது பெரும் பகுதி வாசகர்கள் அவ்விதமே எண்ணி நமக்கு ஆதரவு நல்கி, நம்பிக்கை ஊட்டி உற்சாகம் அளித்து எதிர்காலம் என்னும் இருளிலே தடம் மறைந்து போன பாதைக்கு ஒளி விளக்கு காட்டினர்கள். ஆம் கடிதங்கள் மூலம்தான்.

156 / சரஸ்வதி காலம் 町

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/172&oldid=561254" இலிருந்து மீள்விக்கப்பட்டது