பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு கட்டுரைகள் எழுதினர். பிறகு புத்தம் புதிய புக் ஆஃப் நாலெட்ஜ் பெட்டிக்குள்ளேயே சவாலனம் பயின்று, இடத்தை அடைத்துக் கொண்டு கிடந்தது.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பணத்தேவை அதிகம் ஆனவு டன், தமிழ்ப் புத்தகாலயம் கன. முத்தையா அவர்களின் உதவியோடு, அத் தொகுதிகளே எழுநூற்றைம்பதுக்கோ, எண்நாற்றுக்கோ வி. பா. விற்பனை செய்து விட்டார்.

Ο

| ஒ சாண் ஏறி முழங் சறுக்க’

ஐந்தரை வருடங்களுக்கும் மேலாக, சரஸ்வதி க்கு என்று தனி அலுவலகம் ஏற்பட்டதில்லே. ஆசிரியர் விஜயபாஸ்கரன் சைக்கிளில்தான் எங்கும் போய் வந்து கொண்டிருந்தார். சரஸ்வதி எழுத்தாளர்களுக்கு அன்பளிப்பு என்று பணம் எதுவும் தந்ததில்லை. ஆரம்பம் முதல் ஜெயகாந்தன் மட்டும் கதைக்கு ஐந்து ரூபாய் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். தமிழ் ஒளி எப்போதாவது கவிதைகள் எழுதினுல் (அது வெகு அபூர்வம்), ஐந்து அல்லது பத்து ரூபாய் கேட்டு வாங்கிச் செல்வது வழக்கம். இதர எழுத்தாளர்கள் 'லட்சியப் பத்திரிகைக்குத் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை {ՔԱԶ மனசுடன், அன்பளிப்பை எதிர்பாராமலே அளித்து வந்தார் கள்.

ஏஜண்டுகளின் ஒத்துழைப்பின்மையாலும், உற்பத்திச் செலவு களின் உயர்வினுலும்தான் பத்திரிகைக்கு நஷ்டம் அதி கரித்து வந்தது.

சொந்த அச்சகம் அமைத்துக்கொண்டால் சிரமங்கள் ஒரளவு குறையலாம் என்று வி. பா. கருதினர். ஆகவே சரஸ்வதி பிரஸ் ஏற்பட்டது. அதன் மூலம் சரஸ்வதிக்கும் தனி அலு வலகம் வாய்த்தது.

[...] வல்லிக் கண்ணன் 171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/177&oldid=561259" இலிருந்து மீள்விக்கப்பட்டது