பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேப்பாக்கம், மியான்சாகிப் தெரு, 33-ம் எண் கட்டிடத்தில் அச்சகம் இருந்தது. பத்திரிகையின் தபால் விலாசம் 19, லேங்க்ஸ் கார்டன் ரோடு, சென்னை-2 என்றே தொடர்ந்தது. மவுண்ட்ரோடிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வாலாஜா ரோடில் கடைசியில்-பெல்ஸ்ரோடுத் திருப்பத்துக்கு முன்ன தாக கிளேயிடும் ஒரு சிறு தெருதான் இந்த மியான்சாகிப் தெரு’. அதை 'எருமை மாட்டுச் சந்து' என்று சொல்லு வதே ரொம்பவும் பொருத்தமாக இருக்கும். பால் வியாபா ரம் செய்வோர் சிலர் அங்கே வசித்து வந்ததனுல், தெரு வின் பல பகுதிகளிலும் பெரிய பெரிய எருமைகள் கட்டப் பட்டிருக்கும். சரஸ்வதி பிரஸின் சன்னல் கம்பிகளில்கூட ஒன்றிரண்டு மாடுகளேக் கட்டியிருந்தார்கள். எனவே, வழி பூராவும் சாணமும், கழிவுநீரும், சேறுமாக இருக்கும். அச்சகம் முன்னுல்கூட மோசமான நிலைமைதான். இவற்றை எல்லாம் தாண்டித்தான் உள்ளே போக வேண்டும்.

அச்சகத்தில் அச்செழுத்துக்கள் போதுமான அளவு இருந் தன, டிரெடில் மிஷின் ஒன்று பேருக்கு இருந்தது. இங்கே கம்போஸ் செய்து வெளியே எங்காவது அச்சடித்து வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆரும் ஆண்டு சரஸ்வதியின் எட்டாவது இதழ் (10-8-1959) சொந்தப் பிரஸில் தயாராயிற்று. அவ்விதழிலிருந்து பத்திரி கையின் அளவு புதிய மாறுதலைப் பெற்றது. அகல சைஸ் ‘தீபம்’ இதழைவிடக் கொஞ்சம் பெரிதாக இருக்கும். 32

பக்கங்கள், தனிப் பிரதி 25 நயா பைசா.

அம் மாதத்தில் சென்னேயில் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நிகழ்ந்திருந்தது. பரபரப்போடும், தாக்குதல்கள், மோதல் களோடும் அது நடைபெற்றிருந்தது. எழுத்தாளர் மகாநாடு உண்மையில் ஒரு அரசியல் மாநாடு போல் ஆகிவிட்டது,

மகாநாட்டின் இரண்டாம் நாள் தமிழில் உரை நடை' என் பது பற்றி ஒரு கருத்தரங்கம். விவாதத்தை ரா. ரீ. தேசி

172 / சரஸ்வதி காலம் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/178&oldid=561260" இலிருந்து மீள்விக்கப்பட்டது