பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் துவக்கி வைத்தார். அவர் கூறிய கருத்துக்கள் மீது காரசாரமான விவாதங்கள், துற்றுதல்கள் போற்றுதல்கள் பொழியத் தொடங்கின.

கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கிய டாக்டர் அ. சிதம்பர நாதச் செட்டியார் ஆவேசம் கொண்டு ஆரவாரித்தார். மறை மலை அடிகளைக் குறை கூறுவதா? நச்சிளுர்க்கினியர் போன்ற உரையாசிரியர்களைப் பழிப்பதா? அவர்கள்தான் உரைநடை யின் பிதாக்கள். இவர்களைப் பழிப்பதை எழுத்தாளர், எழுத் தாளர் சங்கம் ஒத்துக்கொள்ளுமானுல், இச்சங்கத்தில் உள்ள தமிழாசிரியர்கள் எல்லாம் சங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்று உணர்ச்சியோடு அறிவித்தார்.

அதனுல் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

அன்று மாலை நிகழ்ச்சியும் சூடாகவே அமைந்தது. சாகித்ய அகாடமி இதுவரையிலும் தமிழ் நூல்களுக்கு அளித்திருக்கும் பரிசுகள், அந்த அகாடமியில் பரிசுக்குரிய நூல்களே சிபாரிசு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் அங்கத்தினர்களின் புத்தகங் களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை யை மாற்றி அமைக்க வேண்டும். சாகித்திய அகாடமியின் பரிசு அதன் அங்கத்தினர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற எண்ணம் எழுத்தாளர்களிடமிருந்து மாறும்படியான வகை யில் சாகித்திய அகாடமியின் அங்கத்தினர் அமைப்பு மாற வேண்டும் என்ற கருத்துள்ள ஒரு தீர்மானத்தை விஜய பாஸ்கரன் கொண்டு வந்தார். சி. சு. செல்லப்பு: ஆதரித் தார்.

இதைத் தொடர்ந்து எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் முழக்கமிட்டார்கள். ஒட்டு எடுப்பின்போது தீர்மானம் தோல்வி கண்டது. இவ் விவகாரம் எல்லாம் விரிவாக சரஸ்வதியில் விளக்கப் பட்டது. உரை நடை' என்று க. நா. சு. ஒரு கட்டுரை யும் எழுதினர். எட்டாவது இதழும், அதன் பின் வந்த சில இதழ்களும் மொழி வெறியர்கள், குறுகிய நோக்குடைய

毽 வல்லிக் கண்னன் 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/179&oldid=561261" இலிருந்து மீள்விக்கப்பட்டது