பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டிதர்கள் வகையருவை எதிர்க்கும் கட்டுரைகள், கவி தைகளை நிறையத்தாங்கி வந்தன. விவாதத்தைக் கிளப்பிய ரா. ரீ தேசிகனின் தமிழில் உரை நடை எனற கட்டுரை 10 - 9 - 59 இதழில்: பிரசுரிக்கப்பட்டது.

அதில் தொட்டாப்புளி என்ற பெயரில் ரகுநாதன் சந்தி சிரிக்கவே சிங்கியடி என்று எழுத்தாளர் மகா நாட்டு நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் கோஷ்டி கானம் ஒன்றை எழுதியிருந்தார். ரொம்ப ரசமான பாடல் அது.

ஆகஸ்ட் இதழிலிருந்து சுந்தர ராமசாமியின் புளியமரம் என்ற புதுமையான நாவல் தொடர் கதையாக வெளி வந் தது தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற தலைப்பில் கேள்விபதில் பகுதி இடம் பெற்றது. "சொந்த அச்சகம்’ என்று ஏற்பட்டும் தொல்லைகள் தீர வில்லே. குறித்த காலத்தில் பத்திரிகையை வெளியிட முடி யாததால், பதினேந்து நாட்களுக்கு ஒரு இதழ் என்ற திட் டம் கைவிடப்பட்டது. 'ஒவ்வொரு இதழையும் காலதாமதமாக வெளியிடுவதற்குப் பதிலாக இரண்டு இதழ்களேச் சேர்த்து, குறிப்பிட்ட தேதி யில் ஒரே இதழாகப் பிரசுரிப்பது நல்லது என முடிவு செய் திருக்கிருேம். இரண்டொரு மாதங்களுக்கு இரண்டு இதழ்கள் சேர்ந்து, மாதம் ஒரு இதழாக வெளிவரும். இது, தற்காலிக மான ஏற்பாடுதான். அச்சகத்தில் செய்ய வேண்டிய மாற் றங்கள் பூர்த்தியானவுடன்-- இரண்டு மாதங்களில்- மீண்டும் மாதம் இரண்டு இதழ்களாக சரஸ்வதி வெளிவரும்’ என்று செப்டம்பர் இதழில் அறிவிக்கப்பட்டது.

என்ருலும், இந்த நம்பிக்கை நிறைவேறக் காலம் துணை புரியவில்லை.

"இந்த ஆண்டில் நாம் பல சிரமங்களுக்கு உட்பட்டோம். சாண் ஏற முழம் சறுக்க என்பது போல ஒரு அடி முன்னே றினுல் இரண்டடி பின் தள்ளப்பட்டோம். இந்த ஆண்டில்

174 / சரஸ்வதி காலம் 다.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/180&oldid=561262" இலிருந்து மீள்விக்கப்பட்டது