பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை ஏஜண்டுகளில் பலர் சரிவர பில் தொகையை அனுப்பி வைக்கவில்லை. இதல்ை பல நகரங்களுக்கு இந்த இதழில் மிகக் குறைவான பிரதி களே அனுப்பப்பட்டிருக்கின்றன, என்று அறிவித்து தொ டர்ந்து சரஸ்வதி கிடைப்பதற்கு ஒரே வழி நேரடியாகச் சந்தாதாரர் ஆவதுதான்’ என்று மேலும் விளக்கியிருந்தார் வி. பா. -

1959 ஜனவரி முதல் சி. சு. செல்லப்பா, முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரி கை’ என்று எழுத்து மாசிகையை நடத்தி வந்தார். அவர் ஏஜன்சி ஏற்பாட்டை நம்பியிருக்கவில்லை. பத்திரிகை இத ழின் விலையை 50 ந. பை, என்று நிர்ணயித்து, அதற்குரிய சந்தா விகிதமும் ஏற்படுத்தி, பணம் வசூலித்து, சந்தாதா ரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இலக்கிய ஏடு ஆக வளர்த்து வரத் திட்டமிட்டிருந்தார்.

செல்லப்பாவின் உற்சாகத்தையும் திட்டமிடப்பட்ட முறையை யும் கண்டறிந்த விஜயபாஸ்கரன், சரஸ்வதி யையும் ஏன் அவ்வாறு நடத்தக்கூடாது என்று யோசித்தார். இதழின் விலையை 50ந, பை ஆக்கி, பக்கங்களே 48 என அதிகரித்து, நவம்பர் முதல் அப்படியே வெளியிடுவது என்று தீர்மானித் தார். எழுத்து பத்திரிகைக்கு அட்டை கிடையாது சரஸ் வதி க்கு ஆர்ட் பேப்பர் அட்டையும், அதில் முக்கால் பகுதிப் படமும் உண்டு.

ரகுநாதனின் தமிழ் இலக்கியத்தில் தத்துவப் போராட்டம்க. நா. சு. உலக இலக்கியம்’, எனது உதிரிப்பூக்கள்’, புத்தக மதிப்புரை ஆகியவை இதழ்தோறும் வந்து கொண்டி ருந்தன.

பல மாதங்களுக்குப் பிறகு ஜெயகாந்தன் கதை ஒன்று (நிந் தாஸ்துதி) அக்டோபர் இதழில் இடம் பெற்றது. கிருஷ்ணன் நம்பி அடிக்கடி கதை எழுதிக் கொண்டிருந்தார்.

[I] வல்லிக்கண்ணன் / 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/181&oldid=561263" இலிருந்து மீள்விக்கப்பட்டது