பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பிரச்சனை பற்றிய விவாதங்களைப் பரிகாசம் செய்யும் தன்மையில் வேந்தன் என்ற இளம் எழுத்தாளர் மொழிப் பிரச்னை என்ருெரு உருவகக் கதை அக்டோபர் இதழில் எழுதியிருந்தார். நளினமான நையாண்டி தொனிக்கும் சிறு கதைகளே எழுதும் ஆற்றல் பெற்றிருந்த வேந்தன் சரஸ் வதி மூலம்தான் எழுத்துலகுக்கு அறிமுகமானுர். இவரது கதைகள் மிகச் சொற்பமானவையே, சரஸ்வதியில் வெளி வந் துள்ளன. பின்னர் வேந்தன் கதைகள் தாமரையில் மிகுதி யாக இடம் பெற்றன. வேறு சில பத்திரிகைகளிலும் பிரசுர மாயின. (வேந்தனின் முழுத்திறமையும் நன்கு வெளிப்பட்டு, எழுத்துலகத்தில் அவர் தனக்கு உரிய இடத்தைப் பெறு வதற்குள் 1971 மே மாதம் அகால மரணமடைந்தார் என் பது துயரச்சேதி ஆகும்.)

நவம்பரில் இதழ் வரவில்லே. 11 - வது இதழ் டிசம்பரில்தான் வந்தது. 48 பக்கங்கள்.

வழக்கம் போல் தமது சிரமங்களே எடுத்துக் கூறி, நமது வேண்டுகோளுக்கு இணங்கி புதிதாக 423 வாசக நண்பர் கள் சந்தாதாரர்களாக சேர்ந்திருக்கின்றனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் 2000 நேரடியான சந்தாதாரர் சேர்க்க வேண்டு மெனத் திட்டமிட்டிருக்கிருேம் என அறிவித்து, இவ்வருடம் ஜனவரியில் ஆண்டுமலர் கிடையாது. ஏப்ரலில் சித்திரை மலராக வெளியிட உத்தேசித்திருக்கிருேம், என்று முடித்து வி. பா. ஒரு தலையங்கம் எழுதியிருந்தார்.

11-வது இதழில் விவாத மேடை இடம் பெற்றிருந்தது. தூய தமிழ்ப்பிரியர்களின் போக்கைத் தாக்கி ஜெயகாந்த னும், தமிழ் மொழியை வளர்ப்பதாகப் பெருமை பேசும் குடு: கிய நோக்கு உடையவர்கள் பற்றி சங்க மித்ரா என்பவ ரும் விறுவிறுப்பான கருத்துக்களைத் தெரிவித் திருந்தார்கள். பழந்தமிழ் இலக்கியவாதிகள் (மொழி வெறியர்கள்) பற்றி பின்னுேக்கிச் செல்லும் பெரியோர்கள் என்ற விரிவான கட்டுரையை சாமி. சிதம்பாளுர் எழுதியிருந்தார்.

176 / சரஸ்வதி காலம் ●

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/182&oldid=561264" இலிருந்து மீள்விக்கப்பட்டது