பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சரஸ்வதி'யில் மீண்டும் மாதம் ஒரு நாவல் சுருக்கம் வெளி யிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. நான்தான் எழுத வேண்டியதாயிற்று.

ஆனல் இந்தத் திட்டம் நீடிக்கவில்லை. சரஸ்வதியில் ஆசை நிறைந்த திட்டம் எதுவுமே சரிவர உருவாகக் காலம் துணை புரியவில்லை,

ஜனவரி இதழில் ஷெட்ரின் நாவல் வஞ்சகன் சுருக்கமும், பிப்ரவரி இதழில் ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபிடிக் கின் சுருக்கமும் வந்தன.

ஜெயகாந்தனுக்கு 'ஆனந்த விகடனில் தொடர்ந்து கதை கள் எழுதும் வாய்ப்பு கிடைத்து விட்டதால், அவர் சரஸ் வதியில் எழுதவில்லை. கிருஷ்ணன்நம்பியும் நகுலனும் அடிக் கடி கதைகள் எழுதிஞர்கள். இலங்கை எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு வெகு அதிகமாகக் கிடைத்தது. க. நா. சுப்ர மண்யம் வளரும் தமிழ் என்று தொடர் கட்டுரை எழுத லானுர்,

“விவாத மேடை யில் இதழ்தோறும் முக்கியப் பிரச்னைகள் ஆராயப்பட்டன.

அவ்வருடம்தான் மெளனியின் கதைகள் முதன் முறையாகப் புத்தகமாகப் பிரசுரம் பெற்றன. அழியாச் சுடர்' என்ற ஸ்டார் பிரசுர வெளியீடான அது பற்றிய விமர்சனத்தை பிப்ரவரி இதழில் நான் எழுதினேன். அதன் விளைவாக சரஸ்வதிக்கு மெளனியின் கதை ஒன்று "பிரக்ஞை வெளியில் கிடைத்தது. ஆயினும் உடனடியாக அதை வெளியிட இயலவில்லை. அக்டோபர் இதழில்தான் அக்கதை பிரசுரமாயிற்று.

ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய இதழ் எதுவும் வெளிவர முடியாமல் போனதே காரணமாகும்.

அக்டோபர் இதழ் இலக்கியத் தரம் கூடிச் சிறப்பாக

178 / சரஸ்வதி காலம் 琶

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/184&oldid=561266" இலிருந்து மீள்விக்கப்பட்டது