பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. இறுதி நாட்கள்

சரஸ்வதி வடிவ மாற்றம் பெறுவதற்கு முன்னதாக இடம் மாறுதல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. பைகிராப்ட்ஸ்ரோடு 393 - ம் எண் கட்டிடத்தில் தமிழ்ப்புத்த கலாய' த்துடன் செயல்பட்டு வந்த சரஸ்வதி அச்சகமும் அலுவலகமும் அங்கிருந்து மாறி, கிருஷ்ணும் பேட்டை, பார்பர்ஸ் பிரிட்ஜ் ரோடு (டாக்டர் நடேசன் சாலே) பிற்பகுதி யில் எலியட்ஸ்ரோடு திருப்பத்துக்கு முன்னே - ஒருவீட்டின் மாடியில் சிறு பகுதியில் இடம் பிடித்தன. சில மாதகாலம் அங்கே இருந்து, பின்னர் அந்த இடம் வசதிப்படவில்லை என்று திருவல்லிக்கேணி தேரடித்தெரு 26 - எண் ஜகன் மோகினி கட்டிடத்தின் மாடிக்கு மாறின.

1962 (மலர் 9 முதல் இரண்டு இதழ்களிலும், கமில் ஸ்வெல பில் எழுதிய தமிழின் வட்டார மொழிகள் என்ற கட்டுரை வந்தது. அடிவானம் நாவலின் பகுதிகள் போக வேறு எது எதையோ போட்டு பக்கங்களை நிரப்புகிற வேலைதான் நடந் தது. அப்படியும் மாதம் ஒரு இதழ்’ என்று கொண்டு வர வும் இயவில்லே,

இரண்டாவது இதழ் பிப்ரவரி - மார்ச் 40 பக்கங்கள். இதில் எழுத்தும் எழுத்தாளரும் - ரா. சு. கோமதிநாயகம் எழுதி யது. டி. கே. சி. கடிதங்கள் என்ற புத்தகம் பற்றி வணு. களு. எழுதிய கடித இலக்கியம்'; டி. கே. சி. சொன்னவை' என்று அந்நூலிலிருந்து எடுத்தெழுதப்பட்ட கருத்துக்கள், 'கலியாண வைபோகம் - ரசமான தகவல்கள்; புத்தக மதிப் புரை, வாஞ்சை - ஆலயம் ஒ. பிளேஹர்டி கதை - அசோகன் தமிழாக்கம் ஆகியனவும் இருந்தன.

மூன்றவது இதழ் (ஏப்ரல் மே) -48 பக்கங்கள். மலேயா சர்வகாலசாலேத் தமிழ் விரிவுரையாளராகப் பணி யாற்றிய ஈ. ச. விசுவநாதன் எழுதிய 19, 20 - ஆம் நூற்ருண்டுத் தமிழ் இலக்கியத்தின் போக்கு என்ற ஆய்வுரை "அடிவானம்

184 / சரஸ்வதி காலம் I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/190&oldid=561273" இலிருந்து மீள்விக்கப்பட்டது