பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் ஒரு உதாரணத்தைக் கூட எடுத்துச்சொல்ல முடியாது. (பிற்காலத்தில், சேலத்தி விருந்து வெளி வந்த இலக்கியக் காலாண்டு ஏடு "நடை" தான் துணிவோடு கடைசி இதழில் காரணங்களே விளக்கி எழுதிவிட்டு பிரசுரத்தை நிறுத்திக் கொண்டது.)

சரஸ்வதி இந்த வகையிலும் வழி காட்டியிருக்கலாமே என்ற மனக்குறை எனக்கு என்றும் உண்டு.

நண்பர் விஜயபாஸ்கரன் சரஸ்வதி நடத்தியதில் வியாபார வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மைதரீன் ஆளுல் அது அவருக்கு தோல்வி அல்ல. சரஸ்வதி போன்ற ஒரு இலக்கியப் பத்திரிகை இல்லையே என்று பிற்காலத்தில் எழுத்தாளர்களும் இலக்கியப் பிரியர்களும் அடிக்கடி வருத் தத்தோடு குறிப்பிடும் அளவுக்கு- அதன் தேவையை உணர வேண்டிய அளவுக்கு. - அதற்கு முக்கியத்துவமும் தனித் தன்மையும் உண்டாகும்படி அதை நடத்தியதே பெரும் வெற்றிதான். -

வியாபாரத் தோல்விகளாக முடிந்த இத்தகைய வெற்றிகள் சரஸ்வதிக்கு முன்னும் இருந்தன. இந்தத் தொடரின் ஆரம் பப் பகுதி அவை பற்றி ஒருவாறு எடுத்துச் சொல்லியது. சரஸ்வதிக்குப் பிறகும் இந்த லட்சிய முயற்சிகள், காலத்தின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தோன்றின. இன்னும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இனியும் தோன்றும்.

சிரமங்கள் பலவற்றையும் ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரமும், புதுமையான முயற்சிகளிலும் சோதனைகளிலும் ஈடுபடும் உற் சாகமும் ஊக்கமும், உழைப்பாற்றலும் கொண்ட லட்சியவாதி களால்தான் அரிய காரியங்கள் சாதனைகள் - நிறைவேற்றப் படுகின்றன; எல்லாத் துறைகளிலும். இலக்கியம், எழுத்து, பத்திரிகைத் துறைகளிலும் இந்த ரகத்தினருக்குக் ക്രങ്ങുഖ് @6..

O

188 / சரஸ்வதி காலம் - [...]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/194&oldid=561277" இலிருந்து மீள்விக்கப்பட்டது