பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து அதிதி என்று அவரைப்பற்றி உள்ளே அறிமுகம்

தம

செய்யும் வழக்கத்தை கலாமோகினி அனுஷ்டித்தது.

க. நன. சுப்ரமண்யம், எம். வி. வெங்கட்ராமன் போன்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் கலாமோகினி க்கு நிறையவே எழுதி உதவியிருக்கிருர்கள். ஸ்வாமிநாத ஆத்ரேயன், கரிச் சான்குஞ்சு (ரா. நாராயணஸ்வாமி), மற்றும் சில (அக்கால, புதிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் இப் பத்திரிகையின் மூலம் ரசிகர்களே அடைந்தன.

1939 முதல் எழுதத் தொடங்கி, 1942-க்குள் ஓரளவு கவனிப் பைப் பெற்றிருந்த நானும் அவ்வப்போது கலாமோகினி' யில் எழுதிக் கொண்டிருந்தேன்.

கலவாணன் (க. அப்புலிங்கம்) என்ற கவிஞரைத் தமிழ் உலகுக்கு நன்கு தெரியச் செய்த பெருமை இந்தப் பத்திரி கைக்கே உரியது.

ந. பி. யும் கு. ப. ராவும் வசனகவிதைகளே இதில் அதி கம் எழுதியிருக்கிறர்கள். இக்காலகட்டத்தினுள், வசனகவி தை எதிர்ப்புப் பலம் பெற்றிருந்ததல்ை, அவர்கள் இருவரும் வசனகவிதையை விளக்கியும், அதற்கு ஆதரவாகவும் கட் டுரைகள் எழுத நேரிட்டது. பிறகு, கலேவாணனும் ஒரு கட் டுரை எழுதினர். நாணல் எழுதிய வசன கவிதைகள் சில வும் இதில் வந்துள்ளன.

ஆரம்ப காலம் முதலே, திருச்சி மட்டக்காரத் தெரு, 24-ம் எண் வீட்டின் மொட்டைமாடி மறுமலர்ச்சி இலக்கிய முகாம் ஆகிவிட்டது. அங்கு எழுத்தாளர்கள் கூடி, இலக்கிய சர்ச்சைகள் செய்து, இரவில் வெகு நேரம் வரை பேசிப் பொழுது போக்குவதும் இயல்பாயிற்று.

கலாமோகினி'யைப் பற்றிக் குறிப்பிடும் போது மிகமுக்கிய மாக எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயமே வேறு.

14 / சரஸ்வதி காலம் 다

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/20&oldid=561100" இலிருந்து மீள்விக்கப்பட்டது