பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ற நிலையில் காலத்தை நழுவ விட வேண்டிய சந்தர்ப் பங்கள் சில ஏற்பட்டது உண்மைதான். ஆனுல் இந்தப் போராட்டத்தில் மரணபயத்திற்கு கொஞ்சங்கூட இடமில்லை என்பதை வலியுறுத்துகிருேம். வாழத்தான் பிறந்தேன்" என்ற தீர்மானத்துடன் கூறிய கலாமோகினி வாழத்தான் போகிறது .

இவ்விதமாக உறுதி கூறிக் கொண்டே வந்த போதிலும், அதன் வாழ்க்கை நித்தியப் போராட்டமாகத்தான் இருந்திருக் கிறது.

திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றிக் கொண்டால், வளர்ச் சிக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்து 1946 ஏப்ரலில் வி. ரா.ரா. கலாமோகினியை சென்னைக்குக் கொண்டுவந்தார்: பட்டினப் பிரவேசம்’ செய்த பிறகு, அது மாதம் இருமுறை" என்று சொல்லிக் கொண்டு, மாதத்துக்கு ஒரு தடவைதான் வர முடிந்தது. அதிலும், நான்காவது இதழ் மிகவும் தாமதமாகப் பிறந்தது. அடுத்த இதழ் முதல் லிமிட்டெட் ஸ்தாபனம் பொறுப்பேற்று பத்திரிகையை நடத்தும் என்ற நம்பிக்கைக் குரலும் அதில் இருந்தது.

அத்துடன் கலாமோகினி என்ற மறுமலர்ச்சி இலக்கிய முன்னணி” யின் வரலாறு முடிந்துவிட்டது.

O

4 கிராம ஊழியன்

மறுமலர்ச்சி இலக்கியப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு பத்திரிகைக்கு கிராம ஊழியன் என்ற பெயர் வாய்த் தது விசித்திரம் தான்.

அல்லது, கிராம ஊழியன்’ எனும் பெயர் பெற்றிருந்த ஒரு

貂 வல்லிக் கண்ணன் , 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/27&oldid=561107" இலிருந்து மீள்விக்கப்பட்டது