பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை தீவிரமான இலக்கியப் பணியில் ஈடுபட்டது விசித்திரமே ஆகும் என்றும் குறிப்பிடலாம்.

ஆல்ை, இந்தப் பெயர் விநோதத்திற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது.

அந்தக் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஜஸ்டிஸ் கட்சி யின் பிரசார ஏடு ஆக திருச்சியிலிருந்து நகர தூதன்' என்ற வாரப் பத்திரிகை வெளி வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் ரெ. திருமலேசாமி விறுவிறுப்பான நடையில், குத்தும் கிண்டலும் சூடும் சுவையும் கலந்த விஷயங்களே விளக்கும் எழுத்தாற்றல் பெற்றிருந்தார். காங்கிரஸ் மீதும் காங்கிரஸ் காரர்கள் பேரிலும் அவர் தொடுத்து வந்த தாக்குதல்கள், திருச்சி ஜில்லாவைச்சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருக்கு எரிச்சல் மூட்டின. தாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினர். அந்த ஆசை பற்றி நகர தூதனு’க்குப் போட்டியாக கிராம ஊழியன் தோன்றியது.

திருச்சிக்கு அப்பால் சுமார் 28 மைல் தூரத்தில் உள்ள துறை யூர் என்ற சிற்றுாரில், எஸ். பூரணம் பிள்ளே எனும் காங்கிரஸ் அபிமானி அதை ஆரம்பித்து நடத்தினர். அவ்வட்டாரத்துப் பிரமுகர்களின் ஆதரவும் அவருக்குக் கிடைத்திருந்தது.

அவர் மரணம் எய்திய பிறகு, அந்தப் பத்திரிகை நின்று போவதை விரும்பாத காங்கிரஸ் அபிமானிகள், லிமிட்டெட் நிறுவனம் ஏற்படுத்தி, கிராம ஊழியனே'த் தொடர்ந்து நடத்த லாஞர்கள். கவிஞர் திருலோக சீதாராம் அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அதற்கு முன்னர் அவர் விழுப்புரத்தில் சொந்தப் பொறுப்பில் பத்திரிகை நடத்தி அனுபவம் பெற்றிருந்தார். பாரதி கவிதை களிலும், ராமலிங்க சுவாமிகள் அருட்பாவிலும் மிகுந்த ஈடு பாடு கொண்டிருந்த திருலோக சீதாராம் துறையூரிலும், அதன்

22 / சரஸ்வதி காலம் []

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/28&oldid=561108" இலிருந்து மீள்விக்கப்பட்டது