பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்று வட்டாரங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, செல் வாக்குப் பெற்றிருந்தார். ஆகவே, அவர் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது பெரிதும் வரவேற்கப்பட்டது.

1942-ல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலவரங்கள் காரணமாக, அன்றைய அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தைப் பெரிதும் பாதிக்கும் அளவில் அநேக நிர்ப்பந்தங்களே விதிக்கத் துணிந்தது. சர்க்காரின் அந்தப் போக்கை எதிர்த்து, தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கும் முறையில், இந்தியா நெடு கிலும் பல பத்திரிகைகள் பிரசுரத்தை நிறுத்திக் கொண்டன. தமிழ்நாட்டிலும் அநேக தேசியப் பத்திரிகைகள் இவ்விதம் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. அவற்றில் கிராம ஊழியனும் ஒன்று.

நிலைமை சீர்பட்டு, இதர பத்திரிகைகள் பிரசுரத்தை மீண்டும் தொடங்கிய பின்னரும், கிராம ஊழியன்’ என்ற அரசியல் ஏடு வெளி வராமலே இருந்தது. கவிஞர் திருலோக சீதா ராமும், பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பில் பெரும்பங்கு கொண்டிருந்த அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியாரும் அதை இலக்கியப் பத்திரிகையாக மாற்றத் திட்டமிட்டுச் செயல் புரிந்தார்கள். அவ்விருவரது கவிதைக் காதலும், இலக்கிய வேகமும் இதற்குக் காரணமாக அமைந்தது போலவே, திருச்சி யில் வி. ரா. ரா. நடத்தி வந்த கலாமோகினி'யின் வளர்ச்சி யும் விறுவிறுப்பும் முக்கியத் தூண்டுதலாக விளங்கியது. திருச்சி இலக்கிய நண்பர்களின் நட்பும் இந்த ஆசையைத் தூண்டி வளர்த்தது. புதிதாகப் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துக் கொண்டிருந்த நெருக்கடி நிலை யும் சேர்ந்தது. எனவே கிராம ஊழியனையே மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை'யாக மாற்றி விட்டார்கள்.

கு. ப. ராஜகோபாலனை கெளரவ ஆசிரியராகக் கொண்டு * கிராம ஊழியன் முதலாவது இதழ் 15-8-1943 அன்று வெளி வந்தது. ஆசிரியர் : திருலோக சீதாராம்.

ü வல்லிக் கண்ணன் / 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/29&oldid=561109" இலிருந்து மீள்விக்கப்பட்டது