பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*தமிழ் நாட்டில் பாரதியை மூல புருஷனுகக் கொண்ட மறுமலர்ச்சி துவக்கின. இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு, அதன் உன்னத யெளவனப் பருவத்தில், ஊழியன் தோன்றுகிருன். பாரதி காட்டிய வழியைப் பணிவுடன் பின் பற்றித் தொண்டு செய்வதை சபதமாகக் கொண்டு விட்டான்' என்ற அறிவிப்புடன், அது தன் இலக்கியப் பணியில் உற்சாக மாக ஈடுபட்டது.

அதன் 9-வது இதழில் கு. ப. ராஜகோபுரலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே, கு. ப. ரா. கும்பகோணத்திலிருந்து கொண்டு தசன் விஷயங்கள் அனுப்பி வந்தார். சொந்தப் பெயரிலும், பரத்வாஜன், கரிச்சான் என்ற பு:ன பெயர்களிலும் அவரது எழுத்துக்கள் இதழ் தோறும் பிரசுரமாயின. மகாராஷ்டிர மன்னன் சிவாஜியின் வரலாற்றை தொடர் கட்டுரையாக எழுதிக்கொண்டிருந்தார். கவிதை, கட்டுரை, கதை, நாடகம் ஆகியவற்றில் அவர் உற்சாகத்துடன் மேற்கொண்ட சோதனை முயற்சிகள் பலவும் ஊழியனில் பிரசுரமாயின.

அக்கால கட்டத்தில், ஆண் பெண் உறவையும் உணர்வுகளே யும் அடிப்படையாகக் கொண்ட இனிய அகத்துறைக் கதை கனே எழுதுவதில் கு. ப. ரா. அதிக ஆர்வம் கொண்டிருந் தார். அதனுல் சென்னைப் பத்திரிகைகள் அவரது கதைகளே வெளியிட மறுத்து விட்டன, அவை அனைத்தும் கலா மோகினி'யிலும் கிராம ஊழியனிலும் பிரசுரமாயின.

கு. ப. ரா. அந்நாட்களில் எழுதிய பாமதி போன்ற ஒற்றை யங்க நாடகங்களும், அழகு உண்மை போன்ற சிறு சிறு கட்டுரைகளும் அற்புதமான படைப்புகள் ஆகும். அவற்றைத் தொகுத்து நூல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று கிராம ஊழியன் நிறுவனம் ஆசைப்பட்டது. அது நடைபெறவே இல்லை.

24 / சரஸ்வதி காலம் I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/30&oldid=561110" இலிருந்து மீள்விக்கப்பட்டது