பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று புத்தக வெளியீட்டகம் அமைப்பதும், நிலா என்ருெரு இலக்கிய மாசிகை நடத்துவதும் வெறும் ஆசைக் கனவுகளே என்பது எனக்கு விரைவில் விளங்கி விட்டது. எனினும் அவர் என்னிடம் ஒரு மூத்த சகோதரரின் அன்பைச் செலுத்தி வந்ததனால், அவரை விட்டுப் பிரிந்து செல்லவும் தயக்கமாக இருந்தது.

மீண்டும் காலம் எனக்கு வழி காட்டியது. சென்னையில், திரு. வி. க. நடத்தி வந்த நவசக்தி'யை, அதில் உதவி ஆசிரிய ராகப் பணியாற்றிய சக்திதாசன் சுப்பிரமணியன் ஏற்றுக் கொண்டு, மாதப் பத்திரிகையாகப் பிரசுரித்து வந்தார். நவ சக்திக்கு நான் வந்து சேரலாம் என்று அவர் அழைத்தார். எனவே கோயம்புத்துரில் ஒன்பது மாதங்கள் வசித்த பிறகு, நான் 1943 டிசம்பரில் முதன் முறையாக சென்னைக்கு வந்தேன்.

  • கிராம ஊழியன் பொங்கல் மலர் தயாரிப்பு வேலைகளில் ஈடு பட்டிருந்த திருலோகசீதாராம் நவசக்தி அலுவலகத்தில் தங்கியிருந்தார். என்ன நண்பனுக ஏற்றுக் கொண்ட அவர் தான் எனக்கு சென்னை மாநகரத்தையும், அங்கு வசித்த பெரிய எழுத்தாளர்களையும், பத்திரிகைக்காரர்களையும் அறிமுகப்படுத்தினர். அத்துடன் நின்றுவிடவில்லை, நவ சக்தி சீராக நடைபெருது என்றும், நான் கிராம ஊழியனுக் கே வந்துவிடவேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் சொல்லிப்போளுர்,

துறையூரிலிருந்து அவர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந் தார். சென்&ன சேர்ந்து அங்கே தங்குவதற்கு வாய்ப்பு அளித்த நண்பரின் பத்திரிகையை விட்டுவிட்டுப் போவதில் எனக்குத் தயக்கம் எழுந்தது. அத்துடன் மற்ருெரு விஷய மும் சேர்ந்தது.

நாடகக் கலைஞர்கள் முத்தமிழ் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ்.

சகோதரர்கள் சென்னை சேர்ந்திருந்தார்கள். பிற்காலத்தில் சென்னையிலேயே தங்கிவிடத் திட்டமிட்டிருந்த அவர்கள்,

口 வல்லிக் கண்ணன் / 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/33&oldid=561113" இலிருந்து மீள்விக்கப்பட்டது