பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணு அசோகன் உலகத்துச் சிறுகதைகளே மொழி பெயர்த்து வந்தார்.

எங்கள் எழுத்து ஆர்வத்தினுலும், உழைப்பினுலும் போக்கி லுைம் வசீகரிக்கப்பட்ட எஸ். டி. சுந்தரம், ராசிபுரம், தனுஷ் கோடி, கு.மா. பாலசுப்ரமணியம் போன்ற அநேகர் தொடர்ந்து எழுதலானர்கள். அப்போது சக்தி ஆசிரியர் ஆகப் பணி புரிந்து வந்த சுப. நாராயணன் அருமையான சிந்தனைக் கட்டுரைகள் எழுதினர். முன்பு எழுதிக் கொண்டிருந்தவர் களில், எம். வி. வெங்கட்ராம் தொடர்ந்து உதவி புரிந்தார். கதைகளும், எம். விக்ரகவிநாசன் என்ற பெயரில் கவிதையும், 'திலோத்தமை என்ற பெயரில் மொழி பெயர்ப்புகளும் எழுதி வந்தார். ஸ்வாமிநாத ஆத்ரேயன், குகன் போன்றவர்கள் எப்போதாவது எழுதி உதவினர். புதிதாக எழுதத்தொடங்கி யிருந்த பராங்குசம் அடிக்கடி கதைகள் எழுதினர்.

"ஊழியன் எழுத்தாளர்களுக்குப் பூரண சுதந்திரம் அளித் திருந்தது. யாரும் எதைப் பற்றியும் எப்படி வேண்டுமானுலும் எழுதலாம்; ஆனல் எழுதப்படுகிறவை சுவையாகவும் கலை நயத்தோடும் விளங்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. ஆகவே, எழுத்தாளர்கள் உற்சாகத்தோடு சகல விஷயங்கள் பற்றியும் எழுதினர்கள். இலக்கியம், சினிமா, நாடகம், சமூக விஷயங்கள் பற்றி எல்லாம் விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த எழுத்துக்கள் இதழ்தோறும் பிரசுரமாயின.

நையாண்டி பாரதியாக நான் எழுதி வந்தவை கிண்டலும் சூடும், சிரிப்போடு சிந்த8னயும் கலந்தனவாய் மிளிர்ந்தன. அவை மிகுந்த கவனிப்பைப் பெற்றன. பாராட்டுதல்களையும் குறை கூறல்களையும், உபதேசங்களையும் வாங்கிக்கொடுத்தன. நான் வைத்திருந்த புனே பெயர்களில் பல (கீராவதாரன், கோரநாதன், சொனு, முனு போன்றவை) அநேகருக்கு எரிச்சல் ஊட்டின. பாரதி அடிச்சுவட்டில்’ என்று நான் எழுதிய வசன கவிதை எதிர்ப்பைப் பெற்றன,

口 வல்லிக்கண்ணன் / 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/39&oldid=561120" இலிருந்து மீள்விக்கப்பட்டது