பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரோதயம் (மாதம் இருமுறை) ஒன்றரை வருடமோ என்னவோ தான் நடைபெற்றது, பெரிய அளவில், பொருள் பலத்தோடு, நடந்து கொண்டிருந்த அந்த இலக்கிய பத்தி ரிகைக்கு மரணம் ஏற்படாது என்று தான் இலக்கியப் பிரியர் கள் நம்பியிருந்தார்கள். என்ருலும், அதுவும் காலமான கனக்கில் சேர்ந்துவிட நேர்ந்தது-கால வகையிஞனே!"

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகச் சோதனைகளும் சாதனை களும் புரிவதே எங்கள் நோக்கம் என்று கூறிக் கொள்ளா மல், உயர்ந்த ஒரு லட்சியத்தை முன் நிறுத்திக் கொண்டு. இச்சத்தர்ப்பத்தில் (1947-ல்) ஒரு பத்திரிகை தோன்றியது. அதுதான் சித்தன. அதன் ஆசிரியர்: அ. சீனிவாச ராகவன். சிந்தனை இல்லா விட்டால் ஞானமில்லை; முன்னேற்றம் இல்லை; நாகரிகம் இல்லை; மனிதனுடைய சாதனை எல்லாம் சிந்தனையின் ஆற்றலைக் கொண்டுதான். எங்கு சிந்தனை தெளிவடைந்து பரந்து ஒங்குகிறதோ அங்கே வாழ்க்கையின் வளம் பெருகும். மனிதனுடைய பெருமை இடையீடின்றி ஓங்கி இலட்சிய சாகரமாகி விடும்.

சிந்தனை வளருவதற்கு பல பொருள்களைப் பற்றிய அறிவு இன்றியமையாதது. இதை உணர்ந்து, இந்தத் தேவையை நிறைவாக்கவே சிந்தனை மலர்கிறது. r -

“உலகிலே கலைவளம் எங்கிருந்தாலும் அதன் வண்ணமெலாம் சிந்தனை இதழ்களின் செந்தமிழ்ப் பொலிவாக அமையும். தெளிவு, ஆழம், புதுமை-இவையே சிந்தனையில் வெளியாகும் கட்டுரைகளின் பண்பாக நிற்பன. ஆராய்ச்சித் திறமையும், கட்டுரை வன்மையும், சிந்தனை நேர்மையும் ஒருங்கே பெற்ற நிபுணர் பலர் சிந்தனையின் மூலமாக உங்களோடு உறவாடுவார் கள்’ என்று அஞ்சலி செய்து வளர்ந்தது அது.

எஸ். வையாபுரிப் பிள்ளே ஒவ்வொரு நாட்டின் இலக்கிய உத யம் பற்றியும் இதில் விரிவாக எழுதினர். இந்திய இலக்கியங்

40 சரஸ்வதி காலம் 다.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/46&oldid=561127" இலிருந்து மீள்விக்கப்பட்டது