பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதியை பு. பி. படுகுழி என்று தமிழாக்கியிருந்தார். அது வும் இதில் தொடராக வந்தது. பு, பி.யின் கயிற்றரவு: இந்தப் பத்திரிகையில் தான் வெளிவந்தது. பி.எஸ். ராமையா, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், வ. க. ஜெகசிற்பியன், உமாசந்திரன் முதலியவர்களது கதைகளும் வந்தன.

மாசிகையாகப் பிறந்த காதம்பரி இரண்டு மாதங்களுக்கு ஒன்றென வளர்ந்து, எட்டாவது இதழோடு மறைந்து விட் 1.இ. - 1948 ஜூன் 3-ம் நாள் புதுமைப்பித்தன் இறந்து போனுர் என்பதையும் இங்கு குறிப்பிட்டு வைக்கலாம் என்று நினைக் கிறேன்.

பெரிய பத்திரிகைகளில் பணிபுரிந்து விட்டு வெளியேறிய எழுத்தாளர்கள் சொந்தமாகப் பத்திரிகை தொடங்குவதும் நிறுத்துவதும் ஒரு மரபு ஆகியிருந்தது. அந்த மரபின்படி யே வித்தன் மனிதன்' என்ற பத்திரிகையைத் தொடங்கி ஒர். "மனிதர்களேயும் நாட்டு விஷயங்களேயும் தனி நோக்கில் கண்டு, தான் உணர்ந்த உண்மைகளே நளினமான பரிகாசத் துடனும், சிந்திக்கத் தூண்டும் முறையிலும், சுவாரஸ்யமான வகையிலும் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் எழுதும் ஆற்றல் பெற்ற விந்தன் நடத்திய மனிதன் விறு விறுப் பாகவும் புதுமையாகவும் இருந்தது.

1954 ஆகஸ்டில் தோன்றிய அந்த மாசிகையின் ஒவ்வொரு இதழிலும் டாக்டர் மு. வரதராசன் கட்டுரை எழுதி வந்தார். இரண்டாவது இதழில் சுந்தர ராமசாமி கதை பிரசுரமாயிற்று. கவிஞர் தமிழ் ஒளி அப்பெயரிலும், பாணன்' என்ற பெயரி லும் கவிதைகள் எழுதினர். ஐந்தாவது இதழ் முதல் ஜெய காந்தன் உதவி மனிதனுக்கு அதிகம் கிடைத்தது. கதை களும் கட்டுரைகளும், எழுதினர் அவர்.

44 / சரஸ்வதி காலம் 匣

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/50&oldid=561131" இலிருந்து மீள்விக்கப்பட்டது