பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இதோ ஒரு சுயமரியாதைக்காரர் வளரும் குழந்தை' "நடமாடும் தெய்வங்கள் போன்ற பகுதிகள் மனிதனுக்குச் சுவையும் தனித்தன்மையும் உயிர்ப்பும் அளித்தன.

  • உலக இலக்கியங்களிலே, உலக மொழிகளிலே, எத்தனையோ விதமான புதுமைகள், புரட்சிகள் தினந்தினம் பூத்துக் குலுங் கிக் கொண்டிருக்கின்றன. ஏன், நம்மை அடுத்திருக்கும் கேரள நாட்டின் மலையாள இலக்கியங்களிலும் ஆந்திர நாட்டின் தெலுங்கு இலக்கியங்களிலும் கூட அவற்றை நாம் பார்க்கி ருேம்; பார்த்துப் பெரு மூச்சு விடுகிருேம்.

அப்படியிருக்கத் தமிழும் தமிழ் நாடும் மட்டும் பழமை என் னும் குட்டையில் ஏன் இன்னும் மட்டை போல் ஊறிக் கொண்டிருக்க வேண்டும்?

காரணம் இருக்கிறது-ஆம், காரணம் இருக்கத்தான் இருக் கிறது-அன்றிலிருந்து இன்று வரை சில சைத்தான்கள் தமிழ் நாட்டு இலக்கிய பீடத்தைப் பற்றிக் கொண்டு நாசம் புரிந்து வருகின்றன. அந்தச் 'சைத்தான்’களைச் சுற்றிச் சனியன்'கள் கூடிக் கொம்மாளம் அடிக்கின்றன. இதுகளுக்குப் புதுமையும் தெரியாது புடலங்காயும் தெரியாது. எதையெல்லாமோ புது மை புதுமை’ என்று கூறிக்கொண்டு அபத்தங்களே, அலங்கார வார்த்தைகளே அள்ளிவீசி, குடும்பக் கதைகள்’ என்ற பேரிலே, ஜீவனற்ற நடம்ஸ்க இலக்கியங்களைப் படைத்துக் குப்பைகளைக் குன்றுகளாகவும் கோபுரங்களாகவும் உயர்த்திக் காட்டி உபாதானம் பெறுகின்றன.

இந்தச் செயலற்றதனத்தைக் கண்டு நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இருந் தாலும், இந்த உபாதானத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தமிழ் மொழி வளராது; தமிழ் இலக்கியமும் வளராது. எனவே போலியைச்சுட்டெரிக்கும் புதுமைகளே, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் ரஸாயனங்களே, சமுதாயத்தின்

● வல்லிக்கண்ணன் / 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/51&oldid=561132" இலிருந்து மீள்விக்கப்பட்டது