பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்றுநோய்களுக்கு மின்சார சிகிச்சை யளிக்கும் புத்தம் புது முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் சித்திரங்களே அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்தஇருந்து வருகிற - மனித மிருகங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகப் பத்திரிகைகளே நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும்; தமிழ் நாட்டை மேம்படுத்த வேண்டும். -

மனிதன் 7-வது இதழில் உங்களைப் பற்றி என்ற தலைப்பில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி இது. இதை ஜெயகாந்தனே எழுதி யிருக்கலாம்.

ஒவ்வொரு இதழிலும் வேகமும் புதுமையும் புத்துயிர்ப்பும் புகுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனிதன் திடமாக வளரவுமில்லை; வெகு காலம் வாழவும் இல்லை. ஒன்பது இதழ்கள் தான் வெளிவந்தன.

லட்சிய வேகத்துடனும் பெரும் நம்பிக்கையோடும் ஆரம்பிக்கப் பட்ட மற்றுமொரு இலக்கியப் பத்திரிகை சாந்தி. இதை ரகுநாதன் திருநெல்வேலில் 1954 டிசம்பரில் துவக்கினர். “முல்லை ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதனின் இலக்கிய நோக்கத்திற்கும், சாந்தி ஆசிரியர் ரகுநாதனின் கருத் தோட்டம், இலக்கிய நம்பிக்கைகள், கொள்கைகள் முதலிய வற்றுக்கும் எவ்வளவோ மாறுபாடுகள் உண்டு. இப்போது அவர் மார்க்ளியேக் கண்ணுேட்டமும், கம்யூனிசப்பற்றுதலும் பெற்றிருந்த முற்போக்கு இலக்கிய வாதி. -

"சொத்தைக் கருத்துகளும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளே இனம் காட்டவும், வெள்ளிக் காசுக்கும் விதேசியச் சிறுமைக்கும் இருதயத்தையே எடை போட்டு விற்று விட்ட எழுத்துலகத் துரோகிகளே அம்பலப் படுத்தவும்,

46 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/52&oldid=561133" இலிருந்து மீள்விக்கப்பட்டது