பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாஷை வளத்தையும் இழிவுபடுத்தும் நாசக் கற்பனைகளே வேரறுக்கவும், தெம்பும் திராணியும், இளமையும், புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டிகளே வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு சாந்தி' தோன்றியது.

சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டி. செல்வராஜ் ஆகியோரின் சிறந்த படைப்புகள் சாந்தி'யில் தொடர்ந்து வெளியாயின. மலேயாளச் சிறு கதைகளையும் சுந்தர ராமசாமி தமிழாக்கி வந்தார். அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்க்ராஜ் ஆனந்த் முதலியவர்களின் இந்தியச் சிறுகதைகள் இடம் பெற்றன. கட்டபொம்மு, மருதுபாண்டியர் போன்ற நாட்டுப் பாடல்கள் குறித்து ரகுநாதன் விரிவான கட்டுரைகள் எழுதினர். நா. வானமாமலை, சாமி. சிதம்பரனர் கட்டுரை களும் பிரசுரமாயின. சாந்தி'யில் ஜெயகாந்தன் கதைகள் இரண்டு வந்தன. பாராட்டத் தகுந்த ஆண்டு மலர் ஒன்றைத் தயாரித்த பின், இரண்டு இதழ்கள் வெளியிட்டு விட்டு, சாந்தி மறைந்து போயிற்று 1956 ஏப்ரலில்.

சாந்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான், வ. விஜய பாஸ்கரன் சென்னையில் சரஸ்வதி”யை ஆரம்பித்தார்.

O

இ. சரஸ்வதி பிறந்தது.

சொந்தமாக ஒரு கலே இலக்கியப் பத்திரிகை தொடங்கி நடத்துவதற்கு உரிய காலம் வந்து விட்டது என்று விஜய பாஸ்கரன் தீர்மானித்தார். டிக்ளரேஷனுக்கு விண்ணப்பிக் கவும் செய்தார்.

அவர் பத்திரிகைத் துறைக்குப் புதியவர் அல்லர். ஒரு பத்திரி

D வல்லிக் கண்ணன் , 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/53&oldid=561134" இலிருந்து மீள்விக்கப்பட்டது