பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாக மாறிற்று. மேலும் அதற்காக உழைத்துக் கொண்டிருப்பது விண்வேலே என்று விட்டுவிட்டேன். பணம் போட்டவர்களும் சோர்ந்து ஒதுங்கி விட்டார்கள்.

அதன் நிர்வாகத்தில் முக்கியப் பங்கு ஏற்றிருந்த திரு ஜே. எஸ். வாசன் பத்திரிகையைத் தமது சொந்தப் பொறுப்பில் சிறிது காலம் நடத்தினர். அவருக்கு விஜய பாஸ்கரன் தெரிந் தவராக இருந்ததனுல் ஹனுமான் ஆசிரியப் பொறுப்பை நண்பர் ஏற்றுக் கொண்டார். இந்த வகையிலும் வி. பா. வுக்கு அனுபவம் சேர்ந்திருந்தது.

அதே கால கட்டத்தில் அவர் சக்தி'யின் துணை ஆசிரியராக வும் இருந்தார்.

தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகப் பிரசுரங்களின் வரலாறு யாரால் எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் சரியே; அதில் திரு. வை. கோவிந்தன் அவர்களுக்கு முக்கியமான இடம் அளித்தே ஆகவேண்டும். சக்தி என்ற சிறந்த மாதப் பத்திரிகையை சுமார் பதினேந்து வருட காலம் நடத்தி பெரும் தொகை நஷ்டப்பட்டவர் அவர். சக்தி வெளியீடு கள்’ என்று பயனுள்ள, அருமையான புத்தகங்களை வெளி யிட்ட பெருமை அவருக்கு உண்டு. புத்தக வெளியீட்டுத் துறையில் பல துணிகரமான முயற்சிகளின் முன்னுேடியாக விளங்கி அத்தொழிலில் ஈடுபட்ட பலருக்கும் வழி காட்டி யாகத் திகழ்ந்தவர் அவர்.

1939-வாக்கில் வை. கோ. சக்தி' பத்திரிகையைத் தொடங் கினர். டைம்’ பத்திரிகை அளவில், அகலமாய் பெரிதாய் நாலைந்து வருடங்கள் வந்தது. முதலில் சுத்தானந்த பாரதி யாரின் எழுத்துக்களே அளவுக்கு அதிகமாக இடம் பெற்றுக் கொண்டிருந்தன.

மூன்ருவது ஆண்டு முதல் தி. ஜ. ர. சக்தி'யின் துணை ஆசிரியரானுர். பத்திரிகை புது வனப்பும் புத்துயிரும் பெற்று

岱 வல்லிக் கண்ணன் / 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/55&oldid=561136" இலிருந்து மீள்விக்கப்பட்டது