பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ந்து வந்தது. பிறகு சுப. நாராயணன் துணை ஆசிரியர் ஆனுர். சில வருடங்களுக்குப் பிறகு கு. அழகிரிசாமியும் ரகுநாதனும் சக்தி"க்குப் பணி புரிந்தார்கள். இறுதி நிலையில் விஜயபாஸ்கரன் அதன் துண் ஆசிரியராக உழைத்தார்.

  • சக்தி'யின் வரலாற்றிலேயே அதன் உச்சகட்ட சர்க்குலேஷன் என்னுடைய காலத்தில் தான் என்று வி. பா. அடிக்கடி கூறுவது வழக்கம். இப்பொழுதும் குறிப்பிடுகிருர். தி.ஜ.ர. சுப. நா., கு. அ. ரகுநாதன் போன்ற பிரபல எழுத்தாளர் களால் சாதிக்க முடியாத சாதனையை நான் நடத்திவிட்டதாக வை. கோ. பாராட்டிக் கொண்டிருப்பார்’ என்றும் நண்பர் சொல்கிருள். .

இந்த இடத்தில் சுவையான விஷயம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது, தி. ஜ. ர.வுக்குப் பிறகு, சக்தி'யின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த சுப. நாராயணன் அதன் உள்ளடக்கத்தில் தீவிரத் தன்மை காட்டி ணுர், சர்க்குலேஷன் ரொம்பவும் உயர்ந்து விட்டது. வை. கோ. வே. சொன்னுர் என்று அவர் என்னிடம் பெருமையாக வும் சந்தோஷத்தோடும் தெரிவித்தது உண்டு. அவருக்குப் பிறகு அழகிரிசாமி - ரகுநாதன் காலத்தில் பத்திரிகையின் சர்க்குலேஷன் உயர்ந்திருப்பது பற்றி கு. அ. மகிழ்வடைத் தார். இறுதி நிலையில் வி. பா. விற்பனை உயர்வு பற்றி பெருமைப்படுவது வழக்கமாகி விட்டது. . -

இதனுல் எனது மனக்குறளி வாலாட்டுகிறது; எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்த வை. கோ. தமது லட்சியப் பணியில் துணையாக வந்து சேர்ந்த நண்பர்கள் சந்தோஷம் அனு பவிக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தோடு அவரவர் காலத்தில் ஒவ்வொருவருக்கும் இப்படி இனிப்பான செய்தி யைச் சொல்லியிருந்திருப்பார் போலும்!

அல்லது உண்மையிலேயே ஒவ்வொருவர் காலத்திலும் சர்க்கு லேஷன் உயர்ந்து, வளர்ந்து வி. ப. காலத்தில் உச்சநிலையைத் தொட்டிருந்திருக்கவும் கூடும். -

50 /சரஸ்வதி காலம் J

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/56&oldid=561137" இலிருந்து மீள்விக்கப்பட்டது