பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை உலகத்தில் எதுவும் சாத்தியம் தான்.

என்ருலும், இவ்விஷயத்தை எண்ணுகிற போது பழைய ஜோக் ஒன்று என் நினைவுக்கு வருவதை நான் தடுக்க முடிவதில்லை.

"ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடைபெற்றது; ஆணுல் ஆள் யிழைக்கவில்லை’ என்பார்கள். அதே கதை தான் இங்கும்.

  • சக்தி பிரமாதமாக வளர்ந்து வந்தது. ஆலுைம் லாபகரமாக வாழமுடியவில்லை. 1950 வாக்கில் வை. கோ. சக்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். சக்தி மலர் என்று மாதம் ஒரு புத்தகம் வெளியிட்டார். அழகிரிசாமி, ரகுநாதன் பொறுப்பில் தயாரான இத்தொகுப்புக்கள் அருமையான இலக்கியக் களஞ்சியம் ஆகும். அவை கூட ஒன்பதோ, பத்தோதான் வந்தன.

சிறிது இடைவேளைக்குப் பிறகு சக்தி மீண்டும் உயிர் பெற்று உலாவத் தொடங்கியது. அக்காலத்தில்தான் விஜய பாஸ்கரன் அதன் துணை ஆசிரியர். இக்காலத்திய சக்தி'யின் வெற்றிக்குத் தனது அரசியல் தொடர்பும் ஒரு காரணம் என்று அவர் அறிவிக்கிருர்:

  • பத்திரிகையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. சக்தி” யைத் தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்று வை. கோ. வால் முடிவு செய்ய இயலவில்லை. பத்திரிகையை நிறுத்தவும் மனமில்லை. இந்த நிலையில் பத்திரிகையை நிறுத்தி விட்டால் நான் என்ன செய்வேன் என்ற கவலே அவருக்கு. ஏனென்ருல், எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை, சக்தி'யை நிறுத்தி விட்டால் உடனடியாக நான் என்ன செய்யப் போகிருேளுே என்றும் கவலை அவருக்கு. இந்த மனப் போராட்டத்தில் அவர் உழன்று வருவதை அறிந் தேன். நானே அவரிடம் பத்திரிகையை மேற்கொண்டும் நஷ்டத்தில் நடத்துவதைவிட மூடிவிடலாம் எனத்தெரிவித் தேன். இல்லை, பார்ப்போம் என்று அவர் தட்டிக் கழித்து

다. வல்லிக் கண்ணன் / 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/57&oldid=561138" இலிருந்து மீள்விக்கப்பட்டது