பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தார், நான் என்னப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், நான் சொந்தத்தில் பத்திரிகை ஆரம்பிக்கிறேன் என்று கூறி, *சக்தி'யை நிறுத்தும்படி சொன்னேன். அதே சூட்டோடு தான் டிக்ளரேஷனுக்கு விண்ணப்பித்தேன்’ என்று வி. பா.

அறிவிக்கிருர்,

அவர் பெற்றிருந்த அனுபவம் காரணமாக இப்போது நன்கு திட்டமிட்டுச் செயலாற்ற முனைந்தார். பத்திரிகையை வெற்றி கரமாக நடத்துவதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்தார். ஐந்து ஆண்டுகள் நஷ்டத்துக்குத் தயாராக இருந்து பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினுல், ஆரும் ஆண்டில் தன்னக் கட்டிப் போகும்படி செய்யலாம் என அன்று அவர் நம்பினுர். அதற்குத் தேவையான மூலதனத்தோடு தான் அவர் சரஸ்வதி வேலையைத் துவக் கிஞர்.

விஜயபாஸ்கரன் தனது பத்திரிகைக்கு சரஸ்வதி என்ற பெயரைத் தேர்ந்து எடுத்ததற்கு ஏதாவது காரணம் உண்டா? இரண்டு காரணங்கள் உண்; என்று அவர் கூறுகிறர். “ஒன்று, என் பெயருக்கு இருந்த அரசியல் வர்ணம். இது ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை என்றும் யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். ஆகவே கொஞ்சமும் அரசி யல் பூச்சுத் தெரியாத பெயராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கலே, இலக்கியப் பத்திரிகை தான் என்பது தெளிவாகத் தெரிய வேண்டும்; கலைமகள் போன்ற ஒரு பெயராக இருக்க வேண்டும் என்று நினத்தேன். இந் திய முற்போக்கு எழுத்தாளர் பிரேம்சந்த் நடத்திய சரஸ் வதியின் ஞாபகம் வந்தது. இரண்டாவதாக, என் மனைவி யின் பெயரும் அதுவே. ஆகவே, சரஸ்வதி: என்ற பெய ரையே முடிவு செய்தேன்."

முதல் இதழ் 1955-மே மாதம் முதல் தேதியிட்டு, ஏப்ரல் இறுதியில் வெளிவந்தது. பத்திரிகை அலுவலகம், வேப்பேரி,

32 / சரஸ்வதி காலம் 毽

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/58&oldid=561139" இலிருந்து மீள்விக்கப்பட்டது