பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா அண்ணுமலே செட்டியார் ரோடு, 1-ம் எண் கட்டிடத் தில் அமைந்திருந்தது.

கைக்கு அடக்கமான சிறிய அளவில் (கிரெளன் சைஸ்) சரஸ்வதி வந்தது. விலை 2 அணு. 40 பக்கங்கள்.

இந்த அளவு பத்திரிகைக்கு அழகானது தான். இப்போது கூட சாஸ்வதி இதழ்களேக் கையில் எடுக்கும்போது இது அழகான சைஸ், பத்திரிகைக்கு அமைவானது என்று நண்பர் சொல்கிருர். இவ்விதம் வேறு சிலரும் கூறுவதை நான் கேள்விப்பட்டது உண்டு. என்ருலும், இது பத்திரிகை சந்தையில் எடுபடாத ஒரு சைஸ் என்றும் விற்பனையாளர் கள் அபிப்பிராயப்படுகிருர்கள். லோகோ பின்னருசி’! *உலகம் பலவிதம்!”

சரஸ்வதி தனக்காக வகுத்துக் கொண்ட பாதை பற்றி முதல் இதழில் இவ்வாறு அறிவித்தது.

நமது பாதை

வணக்கம். சரஸ்வதி'யின் முதல் இதழைத் தமிழ் மக்களின் முன் சமர்ப்பிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிருேம்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதி வழிவகுத்துக் காட்டி ர்ை. அவர் காட்டிய இந்தப் பாதை தான் எங்கள் பாதை. உலக மொழிகள் பலவற்றிலும் பலப்பல அரிய கருத்துக்கள் தினே தினே வெளியாகி வருகின்றன. இவைகளைத் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசிய மல்லவா? அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகத்தில் நாம் மட்டும் பின் தங்கி விடலாமா? ஆகவே, மேலே நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்துக்களைத் திரட்டித் தமிழர்களுக்குத் தரவேண்டும்; அத்துடன் நமது மறைந்து வரும் கலைச்செல்வங்களைத் தேடி எடுத்து வெளி யிட வேண்டும்: தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதை

酉 வல்லிக் கண்ணன், 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/59&oldid=561140" இலிருந்து மீள்விக்கப்பட்டது