பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்களில் தான் (1, 2, 4,) எழுதியிருக்கிருர். இரண்டாவது ஆண்டில்தான் தொடர்ந்து எழுதலானுர்.

எஸ். ராமகிருஷ்ணன், சாமி சிதம்பரளுர், இஸ்மத்பாகடிா முதலியோர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தனர். கே. சி. எஸ். அருணுசலமும் தமிழ்ஒளியும் கவிதைகள் எழுதி வந்தார்கள்.

எனது கதை ஒன்று சரஸ்வதி நான்காவது இதழில் வெளி வந்தது.

ஆர். கே. கண்ணன் பாரதி நோக்கு’ என்ற தலைப்பில் பாரதி பற்றிய ஆய்வுரையை 5-வது இதழ் முதல் தொடர் கட்டுரை யாக எழுதினர். பின்னர், 8வது இதழிலிருந்து புதுமைப் பித்தன் கதைகள் பற்றித் தொடர்ச்சியாக எழுதி வந்தார்.

"சரஸ்வதி'யின் ஏழாவது இதழ் தலையங்கம் இங்கு மீண்டும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று ஆகும்.

அரையாண்டுக்குப் பின்

சரஸ்வதி தோன்றி அரையாண்டு முடிந்து விட்டது. நீங்கள் இன்று வாசிப்பது ஏழாவது இதழ்.

பிள்ளைப் பருவத்துக் கோளாறுகள் ஏதாவது இருந்தால் அவற்றை வென்று, வளர்ந்து இன்று அவள் பொலிவுடன் விளங்கி வருகின்ருள்.

அவளது வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறை செலுத்தி மாதாமாதம் விஷயதானம் அளித்து சரஸ்வதியை போஷித்துத் தமிழகத் துக்கு இலக்கியப்பணி புரிய முன்வந்துள்ள திரு ஆர். கே. கண்ணன், எஸ். ராமகிருஷ்ணன், முகவை இராஜமாணிக்கம், ஆர். கார்த்திகைவேலு, கே. ராமநாதன், பண்டரிநாதன், பாஸ் கரன் முதலானுேருக்கு உங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களுடைய அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும், கதைகளும்,

ü வல்லிக்கண்ணன்/35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/61&oldid=561142" இலிருந்து மீள்விக்கப்பட்டது