பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே, இலக்கிய விமர்சனங்களும், பிறமொழிக் கதைகளின் மொழிபெயர்ப்புக்களும் பிறநாட்டுக் கலைவேந்தர்கள் பற்றிய சொற்சித்திரங்களும் உங்களுக்கு மாதந்தோறும் கிடைத்து வரும் என்கிற செய்தி எல்லோருக்கும் மகிழ்வூட்டும்.

புதிய ஒளியிலே நமது இலக்கிய, சரித்திரப் பொக்கிஷங் களே அனுபவித்துப் பேணுவதோடு ‘சரஸ்வதி நின்றுவிட வில்லை. நமது இலக்கியப் பரம்பரையுடன் பிரிக்க முடியாத படி ஒன்றிவிட்ட அமரர்கள் திரு. வி. க., வ. ரா., வ. வே. சு. ஐயர், ரசிகமணி டி. கே. சி. முதலிய பல அறிஞர்கள் விட் டுச் சென்ற கலைச் செல்வத்தையும் அடிக்கடி சுவைத்து அனுபவிக்க சரஸ்வதி வாய்ப்பளிக்கின்ருள். தமிழ் இலக்கி யம் எந்தப் பாதையில் வந்தது, எந்தப் பாதையிலே போய்க் கொண்டிருக்கிறது என்கிற கால - திசை உணர்வு ‘சரஸ்வதி இதழ் ஒன்றை எடுத்துப் பார்ப்போருக்கு உடனே ஏற்படும்.

சுருங்கச் சொன்னுல், ஒரு குறிக்கோளுடனும், அதைச் செயல் படுத்தக் கூடிய ஒரு திட்டத்துடனும் சரஸ்வதி இயங்கு கிருள். r

குறுகிய நோக்கோடு முற்போக்கு, பிற்போக்கு அம்சங்களைக் கணித்து ஒதுங்கிப் போகாமல், மனித வளர்ச்சிக்குப் பாடுபடும் சகல சக்திகளையும் அரவணைத்துப் பேணுவதே சரஸ்வதி: யின் இலட்சியம். -

இம் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் நீங்கள் அளிக்க வேண் டும். தைரியமாக, திர்தாட்சணியமாக, சரஸ்வதி'யை விமர் சனம் செய்யுங்கள். வளரும் பருவத்தில் புகழுரைகளைவிட விமர்சனச் சொற்களே பயன்தருவன. புகழ்ச்சியில் தலுக்கனம் என்ற பீடை வந்து சேரும். ஆகவே விமர்சனம் ச்ெய்க்-காய் தல், உவத்தல் இன்றி. .

கலை இலக்கியத் துறையில் இன்னும் என்ன அம்சங்களே,

56 / சரஸ்வதி காலம் ●

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/62&oldid=561143" இலிருந்து மீள்விக்கப்பட்டது