பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

-

مية

கப்பில் பொறித்துக்கொண்ட சரஸ்வதி முற்போக்கு இலக் யவாதிகளின் பத்திரிகையாகத்தான் பிறந்தது; வளர்ந்தது.

o

முற்போக்கு இலக்கியவாதிகளின் இலக்கிய நோக்கையும், எழுத்தாளர் போக்குகள் பற்றிய அவர்களது கருத்தையும் விளக்குவதற்கு தி. க. சி., ரகுநாதனின் சாந்தி'யில் (பிப்ரவரி, 1955) எழுதிய விமர்சன வரிகள் நல்ல உதாரணமாக அமை ஆம், என்பதனுல் அவற்றை இங்கே தருகிறேன். வல்லிக் கண்ணன் கதைகள்', ஜெயகாந்தனின் உதயம் என்ற இரு புத்தகங்களையும் விமர்சிக்கையில் எழுதப்பட்டுள்ள அபிப்பிரா பம் இது: - கதை எழுதுகிறவன் எதையும் எப்படியும் எழுதலாம்; ஆளுல், சொல்கிற விஷயத்தை சுவையாகச் சொல்லக் கற்றிருக்க வேண்டும், அதுதான் முக்கியம் இதுவே என் நோக்கம் என்று தமது கதைகளைப் பற்றிய முகவுரையில் கூறுகிருல் ஆசிரியர். (வ. க.).

கதை எழுதுகிறவன் சொல்கிற விஷயத்தைச் சுவையாகச் சொல்லக் கற்றிருக்க வேண்டும் என்பது சரி. எதையும் எப் படியும் எழுதலாம் என்ற கருத்து சரியல்ல. இது கலே கலைக் காகவே! என்னும் செல்லரித்துப் போன கொள்கையின் மறு - ہ: ع تا پایان• . ? t

பதிப்பேயாகும். - -

"எதையும் எப்படியும் எழுதலாம் என்ற வாதம் நடைமுறை யில் பத்தாம் பசலிக் கருத்துக்களேயும், மூட நம்பிக்கைகளையும், பயத்தையும், தோல்வி மனப்பான்மையையும், அவ நம்பிக் கையையும் மக்கள் மனதில் வேரூன்றச் செய்யவே உதவும். ‘எழுத்தாளன் எதை எப்படி எழுத வேண்டும்?' என்ற கேள்வி யுடன், ப்ாருக்காக எழுத வேண்டும்? என்ற கேள்வியும் இணைந்ததுதான். எழுத்தாளன் சிலருடைய நன்மைக்காக அல்ல; பலருடைய நன்மைக்காக எழுத வேண்டும்.

சிலருடைய எதிர்காலத்திற்காக அல்ல; பலருடைய எதிர் காலத்திற்காக எழுத வேண்டும்.

58 / சரஸ்வதி காலம் 二

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/64&oldid=561145" இலிருந்து மீள்விக்கப்பட்டது