பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο

7. இலக்கியத்தின் சில போக்குகள்

“மணிக்கொடி நடந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ்நாட் டில் எழுத்தாளர்கள் மத்தியிலும் பத்திரிகை உலகத்திலும் மூன்றுவித மனுேபாவங்கள் நிலவின (மணிக்கொடி, ஆனந்த விகடன், கலைமகள்) என்று இத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இச் சந்தர்ப்பத்தில் அதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதை ஒட்டி, அந்நாட்களில் (1940 முற்பகுதியில்) கு. ப. ராஜகோபாலன் எழுதிய விளக்கத்தின் முக்கியமான பகுதிகளே இங்கே எடுத்தெழுதுவது விஷயத்தை விட்டு விலகிச் செல்லல் ஆகிவிடாது. - ... --

கு. ப. ரா. எழுதியது

"எழுத்துக்காகத்தான் எழுத்து அல்லது கலைக்காகத் தான் கலை என்று எப்பொழுதும் ஒரு கட்சி உண்டு. இலக்கியத் திற்கு வேருெரு வேலையும் கிடையாது. வேருெரு இயக்கத் திற்கும் காரணமாகாது தன் நெகிழ்ச்சியிலேயே நிலை பெறு வது என்பது அந்தக் கட்சியின் சித்தாந்தம். அதாவது, கலே என்பது கலைஞனின் ஆத்மா வெளியே விரிவு கொள் வது. அவ்வளவுதான். அஃது ஒரு நிகழ்ச்சி, அனுபவம். அதற்கு மேல் போன யாதொரு தத்துவமும் அதில் கிடை யாது என்பது அதன் கொள்கை.

இலக்கியம் இதயத்தின் ஒலிபரப்புத்தான். சந்தேகமில்லை. ஆல்ை அந்த ஒலி உள்ளே இருக்கும் வரையில் அது ஆத் மானுபவம் தான்-கலைஞனின் உள்ள நெகிழ்ச்சி, எந்த நிமி வடிம் எழுத்து, வாத்தியம், வர்ணம், கல் முதலிய கருவிகள் மூலம் அது வெளியேறிப் பரவுகிறதோ, அதே நிமிஷம் அது

60 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/66&oldid=561147" இலிருந்து மீள்விக்கப்பட்டது