பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் முக்கியமாகப் பெரு வாழ்வின் மிதப்பைப் போற் றும் மனப்பான்மை கொண்டது, கற்பனையிலும் வாழ்க்கை யிலும் பெருமையையும் பேற்றையும் அந்தஸ்தையும் கெள ரவத்தையும் போற்றுவது இதன் இயற்கை. வாழ்க்கைப் போர் அலட்சியம் செய்ய வேண்டிய விஷயம். அது நிரந்தரமல்ல. முக்கியமல்ல. சீரும் செல்வமும் தான் வாழ்க்கையின் லட் சியங்களே நிறைவேறச் செய்யும் கருவிகள். அவைதான் போற்றுதற்குரியவை. சுகம் வாழ்க்கையின் லட்சியம்- பெயர், பதவி, கலாசனை, லட்சியத்திற்கொத்த கலே.

மணிக்கொடியின் மனப்பான்மை புரட்சி, வாழ்க்கையிலும், சமூகத்திலும், ரசனையிலும் புரட்சி. புராணமித்யேவ நசாது சர்வம் (பழையது என்பதாலேயே எல்லாம் சிறந்தது அல்ல) என்று காளிதாசன் சொன்னது தான் அதன் கொள்கை. போராட்டத்தில் தான் அதன் உயிர். துக்கத்திலும், வீழ்ச்சி யிலும் வறுமையிலும் தான் உணர்ச்சிகள் சிறந்து ஒளி கொண்டு ஜ்வாலிக்கின்றன என்பது அதன் கொள்கை, சோ கம், ஏமாற்றம், துக்கம் தான் உண்மை என்பது அதன் தீர் மானம். சர்வஜன ஒட்டின் தீர்ப்புப்படி உலகத்தில் பெரு வாரியான மக்கள் அனுபவிப்பது இன்பமா? செல்வமா? பத வியா? இல்லை. அதல்ை மணிக்கொடி மனப்பான்ம்ை, எங் கும் தென்படும் வறுமையையும் நோயையும்தான் ஆராய்ச்சி செய்கிறது. எதையும் அது புறக்கணிப்பதில்லை. எல்லாம் இயல்பு, எல்லாம் இயற்கை, எல்லாம் பலவீனம் என்று தெளிவு கொள்ளுகிறது. போராட்டம் தான் அதன் லட்சியம். போரின் முடிவு கூட அவ்வளவு இல்லை. o . . .

முதல் இரண்டு மனப்பான்மைகளும் கொஞ்சம் நிதானபுத்தி கொண்டவை. மூன்ரும் மனப்பான்மை தீவிரப்போக்கு ചഞ് யது. இதற்குள்ளேயே பல போக்குகள் இருக்கின்றன. உதா ரணமாக, வ. ரா. ஒரு போக்கு பிச்சமூர்த்தி ஒரு போக்கு, புதுமைப்பித்தன் என்ற விருத்தாசலம் ஒரு போக்கு ...

ஆளுல் இதெல்லாம் செளகரியத்திற்காகச் செய்து கொள்ளும்

52 / சரஸ்வதி காலம். 蠶

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/68&oldid=561149" இலிருந்து மீள்விக்கப்பட்டது