பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதார சமத்துவம் முதலியவற்றை லட்சியமாகக் கொண்ட முற்போக்கு இலக்கிய மனுேபாவம்.

மற்றது - திரு. ஸி. என். அண்ணுதுரை எம். ஏ. யின் பேச்சாலும் எழுத்தாலும் ஏற்பட்ட திராவிட இயக்க” வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு, மூட நம்பிக்கைகள், வறுமை, விபசாரம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் ஒழிப்பு: இந்தி எதிர்ப்பு, தமிழ் - தமிழர் உயர்வு, சமூக சீர்திருத்தம் முதலியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட திராவிட இயக்க மனுேபாவம்.

முப்பதுகளிலும் நாற்பதுகளின் ஆரம்பத்திலும் பெரியார் ஈ. வே. ரா. அவர்களின் சிந்தனைகள் பேச்சு மூலமும் எழுத்து வடிவிலும் தமிழ் நாட்டில் பரவியிருந்த போதிலும் பத்திரிகை உலகத்தில் அவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அண்ணுதுரையின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் இளைஞர் களே வெகுவாகக் கவர்ந்தன. புதிய எழுத்தாளர்களைத் தோற் றுவித்தன. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்த இயக்கக் கொள் கைகளே அடிப்படையாகக் கொண்ட பத்திரிகைகள் அதி கம், அதிகமாகத் தோன்றின. இலக்கியப் பத்திரிக்கை” என்று சொல்லிக்கொண்டும் பல வெளி வந்தன.

அண்ணுதுரையின் புத்தகங்கள் பலவற்றையும் நான் படித்துப் பார்த்திருக்கிறேன். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் முதலியவற்றை நேர்மையான விமர்சனத்துக்கு உள்ளாக்குகிற போது, அவற்றில் எவ்வித இலக்கிய நயமும் இல்லை என்பது எளிதில் தெளிவாகிவிடும்.

மேடைப் பேச்சில் அவர் பாணியைப் பின்பற்றி அநேக பிரசங் கிகள் தோன்றியது போல, எழுத்துத் துறையிலும் அண்ணு துரை போக்கை பின்பற்றி எழுத்தாளர்கள் ஆனவர்கள் அதி கம் பேர்தான். இவர்களில் சுய சிந்தனையும், சுய ஆற்றலும் காட்டியவர்கள் மிகச் சிலரேயாவர்.

다. வல்லிக் கண்ணன்/ 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/71&oldid=561152" இலிருந்து மீள்விக்கப்பட்டது