பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், திரா விட இலக்கியம்’ என்று ஒன்றை உருவாக்குவதற்காகவும் நடத்தப்பட்ட இலக்கியப் பத்திரிகைகளையும் நான் கவனித் திருக்கிறேன். கம்பீர ஜன்னியும் இன்ஃபீரியாரிட்டி காம்ப் ளெக்ஸும் தான் இப் பத்திரிகைகளில் அடிக்கடி குரல் எழுப் பிக் கொண்டிருந்தன. தமிழர் உயர்வு, தமிழர் பண்பாட்டுச் சிறப்பு பற்றி எல்லாம் எழுதப்பட்டனவற்றை நான் குறிப்பிட

தமிழில் இலக்கியம் படைப்பதும், இலக்கியப் பத்திரிகை நடத் துவதும் எங்களால் தான் முடியும், மற்றவர்களால் அப்படிச் செய்ய இயலாது என்று எந்த இனத்தவரோ பெருமையாகச் சொல்விக் கொண்டிருந்தது போலவும், அதைப் பொய்ப்பித்து 'திராவிடர்களும் உயரிய பத்திரிகைகள் நடத்திக் காட்ட முடியும், மலர்கள் தயாரிக்க முடியும் என்று உணர்த்தும் விதத்தில் அப் பத்திரிகைகள் வெளிவருவதாகவும் அவற் றின் ஆசிரியர்கள் சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும் ஒலி பரப்பி வந்தார்கள். ஆளுல் பத்திரிகைகள் விமர்சனப் பார்வைக்கு திருப்தி அளிப்பனவாக அமைந்ததில்லை.

அண்ணுதுரை மறுமலர்ச்சி என்ற பதத்தையும் வேறு பொரு வில் கையாளலானுர். தமிழ் மறுமலர்ச்சி என்று அவர் குறிப் பிட்டார். கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களை ஒதுக்கு வது, திருக்குறளே உயர்த்துவது, தமிழ் மொழிக்கு சகல வகை களிலும் உயர்ந்த அந்தஸ்து தேடித் தருவது, தமிழர் பண்பாட்டு உயர்வு பேசுவது முதலியவை இத்தமிழ் மறு மலர்ச்சி"யில் அடங்கியிருந்தது.

இந்த மனுேபாவம் இயக்கரீதியில் வளர்ந்து வேகம் பெறக் காலம் துணைபுரிந்துள்ளது எனினும், கால ஓட்டத்தில் இந்த இயக்க அடிப்படையில், கவனித்தே தீரவேண்டிய பத்திரி கைகளோ, குறிப்பிடத் தகுந்த இலக்கிய படைப்புகளோ தோன்றவில்லை என்பதே என் கணிப்பு.

66 / சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/72&oldid=561153" இலிருந்து மீள்விக்கப்பட்டது