பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"முற்போக்கு இலக்கியம் மறுமலர்ச்சி இலக்கியத்தைவிடத் தீவிரமானது. மேலே எடுத்துச் சொன்ன மேற்கோளில் கு. ப. ரா. கூறியிருப்பது போல மறுமலர்ச்சி மனப்பான்மை எங் கும் தென்படும் வறுமையையும் நோயையும் தான் ஆராய்ச்சி செய்கிறது. எதையும் அது புறக்கணிப்பதில்லை. போராட் டம் தான் அதன் லட்சியம். போரின் முடிவு கூட அவ் வளவு இல்லை.

ஆனல் திட்டமான ஒரு முடிவுக்கு வழி வகுத்துக் காட்ட வேண்டும் என்பது முற்போக்கு இலக்கிய மனுேபாவம். வறுமையை, சிதைவை, சீர்குலவை மட்டுமே உணர்ச்சி யோடு சித்தரித்துக் கொண்டிருப்பதில் பொருளுமில்லை; பய னுமில்லை. அவற்றின் காரணத்தைச் சுட்டிக் காட்ட வேண் டும். அத்துடன் அவ் இழிநிலையிலிருந்து மீளுவதற்கு வழி யையும், மீண்டும் புதுவாழ்வு காண முடியும் என்ற நம்பிக் கையையும் தரவேண்டியது இலக்கியத்தின் கடமை என வலியுறுத்துகிறது அது."

இது எனக்கு முற்றிலும் உடன்பாடானது அல்ல. எதையும் எப்படியும் எழுதலாம்; எழுத்தாளன் எல்லாவற்றையும் சித் திரிக்க வேண்டியதுதான். ஆளுல், சொல்வதை, சுவையாக, கலைநயத்தோடு சொல்ல வேண்டும். இதைத்தான் நான் அன்றும் இன்றும் சொல்லி வருகிறேன்.

"முற்போக்கு இலக்கியம் பற்றி விரிவாக விளக்கம் கூற வந்த ரகுநாதன் எழுதியிருக்கும் முடிவுரை எனக்குப் பிடித் திருக்கிறது. அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து அது. சரஸ்வதி'யில், ரகுநாதனேக் கேளுங்கள்’ என்ற பகு தியில் அவர் கொடுத்துள்ள ஒரு விளக்கத்தின் கடைசிப் பகுதி இது:

'நல்ல கருத்தை மட்டும் பிரதிபலிப்பதால் ஒன்று நல்ல இலக்கியமாகி விடுவதில்லை. நல்ல கலையழகோடு பிரதிபலிப் பது தான் நல்ல இலக்கியமாகும். மனிதனின் மகோந்நத

国 வல்லிக் கண்ணன் / 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/73&oldid=561154" இலிருந்து மீள்விக்கப்பட்டது