பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ச்சிகள் அழிவதில்லை. எனவே அந்த உணர்ச்சிகளைச் சிறந்த சொல்லோவியமாக்கும் இலக்கியங்களும் அழிவ தில்லை. இலக்கியத்தை வெறும் விளம்பரக் கருவியாக்க முனயும் போது அந்த இலக்கியம் கருவிலேயே செத்து விடுகிறது. விளம்பரம் மட்டுமே மிஞ்சுகிறது. கலை செத்து விடுகிறது. விளம்பரம் செய்வது மட்டும் கலையாகி விடாது. விளம்பரத்தையும் கலையழகோடு செய்யும் போது தான் இலக்கியமாகிறது. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொருந்தும். முற்போக்கு இலக்கியமும் இதற்கு விதிவிலக் கல்ல. மகோந்ததமான உணர்ச்சிகளை, மனித குலத்தை, மேலும் மேலும் வளர்த்து மனிதர்களாக்கும் உணர்ச்சிகளே. மனிதர்களாக்க வேண்டும் என்ற நல்லுரிமைப் போரில் எழும் உணர்ச்சிகளைச் சிறந்த கலையழகோடு வெளியிடும் சிறந்த இலக்கியங்கள் என்றும் சிரஞ்சீவிகளாக இருக்கும்; தனது காலத்தில் தலைசிறந்த இலக்கியமாகவும், தனது காலத்துக் குப் பின்னர் சிறந்த ஆதர்சமாகவும் வழிகாட்டியாகவும் நின்று நிலவும்.”

O

8 மூன்ருவது ஆண்டில்

‘சரஸ்வதி முற்போக்கு இலக்கிய ஏடு ஆகத்தான் பிறந்து வளர்ந்தது. முற்போக்கு இலக்கியவாதிகள்தான் அதில் அதிகம் எழுதிக் கொண்டிருந்தார்கள், ஆரம்ப வருடங் களில். -

ஆயினும், சரஸ்வதி ஆசிரியர் விஜய பாஸ்கரன், அநேக முற்போக்கு இலக்கியவாதிகளைப் போல குறுகியநோக்கு

கொண்டிருக்கவில்லை.

மார்க்ளியேக் கண்ணுேட்டத்துடன், லெனினியக் கோட்பாடு களுக்கும் கம்யூனிஸ் தத்துவத்துக்கும் ஏற்ப, எழுதப்படுகிற

68 / சரஸ்வதி காலம் 다

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/74&oldid=561155" இலிருந்து மீள்விக்கப்பட்டது