பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1957 ஜனவரி முதல் சரஸ்வதி மூன்ருவது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. அதன் வரலாற்றில் அந்த ஆண்டு விசே ஷங்கள் நிறைந்தது ஆகும். இவ்வாண்டில் சரஸ்வதி'யில் பல புது அம்சங்கள் சேர்க்கப்பட்டன. சூடான விவாதங்களும் சுவையான விளக்கங்களும் இடம் பெற்றன.

"ரகுநாதனைக் கேளுங்கள் என்ற பகுதி புதிதாக ஆரம்பிக்கப் பட்டது. வாசகர்களின் கேள்விகளுக்கு ரகுநாதன் விரிவான பதில்கள் எழுதி வந்தார்.

இந்திய சினிமாத் தொழிலில் உள்ள தலைசிறந்த ஒளிப்பதி வாளர்களில் ஒருவரான நிமாய்கோஷ் திரைப்படத் தொழில் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினர்.

நா. வானமாமலை பள்ளுப்பாட்டு பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையும், கே. சி. எஸ். அருணுசலம் எழுதிய வீழ்ந் திலன் என்ற போதும் என்ற கதையும் தொடர் விஷயங் களாகப் பிரசுரமாயின.

ஒவ்வொரு மாதத்திய முக்கிய நிகழ்ச்சிகளையும் அறிவிக்கும் 'வம்பு மடம்' ஆக ரிக்ரியேஷன் கிளப்' என்ற பகுதி தொ டங்கப்பட்டது.

திரை உலகம் என்ற பகுதியில் சினிமா விமர்சனங்களும், பட உலகச் செய்திகளும், சிற்சில படங்களுடன் பிரசுரிக்கப் பட்டன. ஆரம்பத்தில் மாஜினி திரைப்பட விமர்சனம் எழுதி வந்தார். சில இதழ்களுக்குப் பிறகு இந்தப் பொறுப் பை தி. க. சிவசங்கரன் ஏற்றுக் கொண்டார்.

மூன்ருவது ஆண்டிலிருந்துதான் சுந்தரராமசாமி சரஸ்வதி” யில் தொடர்ந்து எழுதலானர். முதலில் அவரது சிறுகதை கள் வந்தன. பிறகு தகழி சிவசங்கரம் பிள்ளையின் *தோட்டி யின் மகன்’ எனும் நாவல் அவரால் மொழி பெயர்க்கப்பட்டு தொடர் கதையாக வெளியாயிற்று.

70 / சரஸ்வதி காலம் 二

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/76&oldid=561157" இலிருந்து மீள்விக்கப்பட்டது