பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். கே. கண்ணனும், ஆர். கார்த்திகைவேலும் கட்டுரைகள் எழுதுவதுடன், புத்தக மதிப்புரையையும் கவனித்துக் கொண்டார்கள்.

இந்த ஆண்டு முதல்தான் சரஸ்வதி’க்கு எனது எழுத்துப் பணியும் அதிகமாகியது. மாதம் தோறும் சிறுகதை எழுதிய தோடு, பெரிய மனிதர்களைப் பற்றிய சுவையான விஷயங் கள், அயல் நாட்டுக்கதைகளின் மொழிபெயர்ப்பு போன்ற

வற்றையும் அடிக்கடி எழுதலானேன்.

சாமி. சிதம்பரனரும் இதழ் தோறும் கட்டுரை எழுதி உதவி ஞர். -

ஜெயகாந்தன் எழுதி வந்த கதைகள் இந்த ஆண்டில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கின. பாராட்டுக்களையும் கண் டனங்களையும் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருந்தன.

சரஸ்வதி’யின் பக்கங்கள் 80 என அதிகரிக்கப்பட்டு, விலே யும் 25 பைசாவாக உயர்த்தப்பட்டது.

அவ்வப்போது வேறு புதுமைகளும் சேர்க்கப்பட்டன. சதுரங் கம்’, கற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அவ் விளை யாட்டு பற்றி விளக்கக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. போட்டோ பிடிக்கலாம் வாருங்கள்’ என்று, போட்டோ எடுக்கும் கலே பற்றி ஜே. எம். கல்யாணம் எழுதலானுர்.

ஆருவ்து இதழ் முதல் புத்தகச் சுருக்கம் இணக்கப்பட் டது. இலியா எரன்பர்க்கின் இந்திய நினைவுகள், ஆண் டன் செகாவின் கண்மணி', டால்ஸ்டாயின் மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?, டிக்கன்ஸின் டேவிட் காப்பர் பீல்ட்”, எமிலிஸ்ோலாவின் நிலம்’ ஆகியவை இவ்வாண் டில் இடம் பெற்றன.

அ. நடராஜன் எழுதிய விஞ்ஞானக் கட்டுரைகளும் டி. செல் வராஜின் சிறு கதைகளும் அவ்வப்போது பிரசுரமாயின.

D வல்லிக் கண்ணன் / 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/77&oldid=561158" இலிருந்து மீள்விக்கப்பட்டது