பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜூலே மாத இதழ் புதுமைப்பித்தன் மலர் ஆக வெளி வந்தது. பு. பி. இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நினைவை கெளரவிக்கும் வகையிலும், அவரது எழுத தாற்றலேயும் படைப்புகளின் தன்மையையும் தமிழ் நாட்டி னருக்கு எடுத்துச் சொல்லும் முறையிலும் இந்த மலர் தயா சிக்கப்பட்டிருந்தது. சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது இம்மலரின் தலையங்கம்:

சிறுகதை சாம்ராட்

நேற்றைய தினம்தான் என்று தோன்றும், என்ருலும் எட் டாண்டுகள் கழிந்து விட்டன. புதுமைப்பித்தன் நம்மை விட்டுப் பிரிந்து.

உள்ளத்தை ஊடுருவி மனச்சாட்சியைக் குத்திக் கிளறும் அந்த விசாலமான, தீட்சண்யம் மிகுந்த கண்கள் மூடிப் போய் எட்டாண்டுகள் கழிந்துவிட்டன.

வாழ்வின் முலேக்காம்புகளே ஆத்திரத்துடன், பரபரப்புடன், அழுகுரலுடன், பசி ஏக்கத்துடன் சிசுவைப்போல் சுவைத்து உறிஞ்சிய அவரது துடிக்கும் உதடுகள் - ஜீவமதுவை மாந்தி விரிந்த மலர்ந்த அந்த உதடுகள் நித்ய நித்திரையி லே ஆழ்ந்து, இலேசாகச் சாம்பி வதங்கிப்போய் எட்டாண் டுகள் ஆகிவிட்டன.

வாழ்வின் அழகுகளே, குரூரங்களே, விகாரங்களே, வக்கிரங்களே மனித மனம் நிறைவாகக் காணும் பொருட்டு அற்புதமான வளைவுகளே அமைத்த அவரது கற்பனை எல்லாம் ஸ்தம்பித் துப் போய் எட்டாண்டுகளாய் விட்டன. -

என்ருலும் நேற்றைய தினம்தான் நடந்ததுபோல ஒரு மயக்கம் உண்டாகிறது. -

அவர் எழுத்தின் வசீகரமும், வேகமும்தான் இந்த மயக்கம் காட்டுகின்றன. - -

72 / சரஸ்வதி காலம் 西

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/78&oldid=561159" இலிருந்து மீள்விக்கப்பட்டது