பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதநாயகம் பிள்ளே காலத்திலிருந்து, பாரதியார் வழியாக இன்றைய தினம், சொந்தமாகக் கதைகள் எழுதும் பலர் தோன்றியிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆயினும் இவர்கள் சிருஷ்டிகள் எல்லாம், இனி வருங்கால இலக்கியத் து அஸ்திவாரமாகவும், உற்சாக சாதனமாகவுமே இருக் கின்றன. இலக்கணம் கட்ட ஆரம்பிக்கும் அளவு இன்னும் ஏற்பட்டு விடவில்லே." -

இப்படி மணிக்கொடி"யின் முதல் அத்தியாயம் ஒரு சந்

      • * * :: }+1^*,-- + IÊ தர்ப்பத்தில் பேசியிருக்கிறது.

-

இதுவும் உண்மையே, வெறும் புகழ்ச்சி இல்லை என்பதை தமிழ் இலக்கிய நண்பர்கள் அறிவார்கள்.

"மணிக்கொடி முதல் பதினெட்டு மாதம் ராஜீய வாரப் பதிப்பாக வெளியிடப்பட்டு வந்தது. பின்னர், தமிழ் இலக் கிய வளர்ச்சித்துறையிலிருந்த தேவையை யுணர்ந்தும், மணிக் கொடி ஊழியர்களுக்கு இந்தத் துறையிலிருந்த உற்சாகத்தி குலும் மாதமிருமுறைச் சிறுகதைப் பத்திரிகையாக மாற்றப் பட்டது. மாதமிருமுறை வெளியீடு முழுவதும் தனி மனிதர் களின் முயற்சியென்ருல் அது மிகையல்ல. ரீமான்கள் பி.எஸ். ராமையா, ஏ.கே. ராமச்சந்திரன் (கி.ரா.) ஆகிய இருவரே, பத்திரிகையின் முழுப்பொறுப்பையும் வகித்து நடத்தி வந்தனர்' என்று, நான்கு வருடம் முடிந்ததும், அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. -

அவ்வாறு பொறுப்பேற்று, மணிக்கொடி"யைத் தனித் தன் மையோடு நடத்துவதில் ஏற்பட்ட சிரமங்களேயும் அனு பவங்களேயும் பி. எஸ். ராமையா மணிக்கொடிக் காலம்’ தொடரில் உணர்ச்சியோடும், பசுமை நினைவோடும், சுவா ரஸ்யமாகவும் எடுத்துக் கூறியிருக்கிருர்.

தனி நபர்களின் லட்சிய வேகமும், குறையாத ஆர்வமும், குன்ருத ஊக்கமும், சலியாத உழைப்பும், தளராத தன்னம்

2 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/8&oldid=561088" இலிருந்து மீள்விக்கப்பட்டது