பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காலத்தால் சாகாத கதை மன்னன் - ரகுநாதன், புதுமைப் பித்தன் - எஸ். வையாபுரிப் பிள்ளே புதுமைப்பித்தனும் இலங்கையும் - க. கைலாசபதி, புதுமைப்பித்தனின் பொன் னகரம் - ஜெயகாந்தன், இலக்கியமேதை” - வல்லிக் கண் ணன், வீரவணக்கம் வேண்டாம்’-தி. க. சிவசங்கரன், புது மைப்பித்தன் எழுதிய சாமியாரும், குழந்தையும், சீடையும்; அதில் என்ன இருக்கிறது? - ஆர். கே. கண்ணன் ஆகிய கட் டுரைகளும், பு. பி. யின் பொன்னகரம் சாமியாரும் குழந் தையும், சீடையும் கதைகளும் இம்மலரில் இடம் பெற்

றிருத்தன.

மற்றும் இதர அம்சங்களும் வழக்கம் போல் வந்திருந்தன. தி. க. சி. விவாதத்துக்குரிய கருத்துக்களே தனது கட்டுரை யில் எழுதியிருந்தார்.

Ç

9. விவாதங்களும் விளக்கங்களும்

புதுமைப் பித்தன் மலரில் தி. க. சிவசங்கரன் வீரவணக்கம் வேண்டாம் என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந் தார்.

புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிலேயே தலே சிறந்தவர் என்றும் ஆசிய எழுத்தாளர்களில் சீனத்து மாக்ஸிம் கார்க்கி எனப் போற்றப்படும் லூசூனுக்குச் சம மானவர் என்றும் சில அன்பர்கள் புதுமைப் பித்தனுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

புதுமைப் பித்தனைப் புறக்கணிப்பது எவ்வளவு தவருே, அவ்வளவு தவறு புதுமைப்பித்தனுக்கு வீரவணக்கம் செலுத் துவதும். இரண்டும் உண்மையை மறந்து சாமியாட்டம் தான். வெறித்தனம் தான்.

76 / சரஸ்வதி காலம் 鲇

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/82&oldid=561163" இலிருந்து மீள்விக்கப்பட்டது