பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நிலையில் நின்று திர்ப்பளிக்கிருர் என்று ஒரு சிலர் கட் டுரையைப் பாராட்டியிருந்தனர்.

மலரைப் பாராட்டி எழுதிய எழுத்தாளர் ந. சிதம்பர சுப்ர மண்யன் இவ்வாறு குறித்திருந்தார்

-ஒரு இலக்கிய ஆசிரியனுக்கு ஒரு இதழ் ஒரு பத்திரிக்கை கொண்டு வருவது என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. சினிமா நட்சத்திரங்களையே தாங்கி வரும் அட்டைப் படங் களுக்குப் பதிலாக ஒரு நூலாசிரியன் படத்தைப் போட்டு பத்திரிக்கை வெளியிடுவது ஒரு அற்புத நிகழ்ச்சி என்றுதான் சொல்லுவேன். தங்கள் கோஷ்டியில் உள்ளவர்களின் உற்சா கமும் சுறுசுறுப்பும் எங்கள் பழைய மணிக்கொடி நாட்களே நினைவூட்டுகின்றது -

புகழுரைகளில் வார்த்தைகளின் பலன் மாத்திரம் இருப்பதில் பிரயோசனம் இல்லை. கருத்தில் ஆழமும் வேண்டும். உற்சாக வெறி மாத்திரம் போதாது. விருப்பு வெறுப்பற்ற மனப்பான் மையை வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் இலக்கியத்தை நன்கு எடை போட முடியும். ரீ. தி. க. சி. எழுதிய கட் டுரையைப் பார்த்தேன். ஓர் அளவு நான் ஆமோதிக்கிறேன். பலாப்பழம் பிடித்தவர்கள் பலாப்பழம்தான் சிறந்தது என்பார் கள். ஆரஞ்சுப்பழம் பிடித்தவர்கள் ஆரஞ்சைச் சொல்லுவார் கள். லெல்லி உயர்ந்தவரா, கீட்ஸ் உயர்ந்தவரா, வோர்ட்ஸ் வார்த் உயர்ந்தவரா, என்பதை எப்படி அடித்துச் சொல்ல முடியும்?

சி. சு. செல்லப்பாவும் கருத்து தெரிவித்திருந்தார். "இலக் கியத்தை பொதுப் படையாக ரசித்து, இலக்கிய கர்த்தாக் களைப் பற்றி பொதுவாகவும் அவர்களது சிருஷ்டிகளைப் பற்றி மேலோட்டமாகவும் அபிமானத்துடன் பார்த்தால் போதும் என்ற பரவலான அபிப்பிராயம் தமிழ் இலக்கியத்தில் பரவி யுள்ள காலம் இது. மேல் நாடுகளில் அரை நூற்ருண்டு, ஒரு நூற்ருண்டுகளுக்கு முன்பு எந்த நிலையில் இலக்கிய விமர்

80 / சரஸ்வதி காலம் 呜

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/86&oldid=561167" இலிருந்து மீள்விக்கப்பட்டது