பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனம் நிலவியதோ அந்த நிலையில் இன்று இருக்கிறது தமிழ் விமர்சனப் போக்கு. இலக்கிய 'சிருஷ்டிக்குள்ளும் இலக்கியா சிரியனின் கைத்திறனுக்குள்ளும் புகுந்து விண்டு பார்த்து ரசித்து நயத்தை எடுத்துக் காட்டும் தூண்டுதல் முயற்சி கள் இன்று நமக்குத் தேவை. சரஸ்வதி புதுமைப்பித்தன் மலர் தார்க்கோல் குத்தாக விழுந்திருக்கிறது. அதில் வெறும் அன்பு, முரட்டுத் துணிச்சலே மட்டும் நான் பார்க்கவில்லை. ஓரளவு விஷய ஞானத்துடன் கூடிய கருத்துக்கள் பல விழுந்திருக்கின்றன. இதுபோல வேறு எழுத்தாளர்களைப் பற்றியும் அவ்வப்போது சரஸ்வதி விண்டு பார்ப்பாள் என்று நம்புகிறேன், என்று அவர் எழுதியிருந்தார்.

ஆகஸ்ட் இதழில் தி. க. சி. தனது கருத்துக்களே மேலும் தெளிவு படுத்தும் விதத்தில், புதுமைப் பித்தனப் பற்றி இன்னும் கொஞ்சம்--- என்ற கட்டுரையை எழுதினர். அதில் அவர் வலியுறுத்தியது -

"புதுமைப்பித்தன் நல்ல இலக்கியத்தையும் எழுதியிருக்கி ருர், நசிவு இலக்கியத்தையும் எழுதியிருக்கிருர்.

அவர் எழுத்துக்களில் விஞ்ஞானமும் இருக்கிறது; அஞ் ஞானமும் இருக்கிறது. அமுதமும் உண்டு; நஞ்சும் உண்டு. அவருடைய யதார்த்தவாத சிருஷ்டிகளை வரவேற்க வேண் டும். பழைமைவாதப் படைப்புகளே ஒதுக்கித் தள்ள வேண் டும்.

புதுமைப்பித்தனுடைய வெற்றிகளைக் கண்டு கும்மாளம் போட்டால் போதாது. அவருடைய தோல்விகளையும் மக்க ளுக்குத் துணிச்சலுடன் எடுத்துரைக்க வேண்டும். அவரைப் பற்றி ஒரு சமநிலையான விமர்சனத்தை விஞ்ஞான ரீதி யான விமர்சனத்தை விருப்பு வெறுப்பு அற்ற விமர்சனத்தை மக்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

நம்முடைய எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் புதுமைப் பித்

I வல்லிக் கண்ணன் / 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/87&oldid=561168" இலிருந்து மீள்விக்கப்பட்டது