பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனுக்குப் புகழ்பாடும் பண்பு- வீரவணக்கம் செய்யும் பண்பு. வளர்ந்து கொண்டே செல்கிறது. புதுமைப் பித்தனின் எழுத் துக்களிலுள்ள குறைபாடுகளே சுட்டிக் காண்பிக்கும் பண்பு வளரவில்லை. இந்தப் போக்கு முற்போக்கு இலக்கிய வளர்ச் சிக்குக் கேடு விளைவிக்கும்.

துன்பக்கேணி, நாசகாரக் கும்பல், பக்த குசேலா, கவந்தனும் காமனும், இது மிஷின் யுகம், மனித யந்திரம், சங்குத்தேவ வின் தர்மம், காலனும் கிழவியும், பொன்னகரம் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், நியாயம்தான் ஆகிய கதைகளே எழு திய முற்போக்குப் புதுமைப் பித்தனைப் பற்றி நாம் நிரம்பப் பேசுகிருேம்.

விபரீத ஆசை, கயிற்றரவு, இலக்கிய மர்ம நாயனர் புராணம், கட்டிலே விட்டிறங்காக்கதை, புரட்சி மனப்பான்மை, கோபா லபுரம் ஆகிய கதைகளே எழுதிய பிற்போக்குப் புதுமைப்பித் த&னப் பற்றிப் பேச அஞ்சுகிருேம். மக்களுக்கு அவர்மீது இருக்கும் மதிப்பு குறைந்து விடுமோ என்று பயப்படுகிருேம், காஞ்சனே, கபாடபுரம், பிரம்ம ராஷஸ், வேதாளம் சொன்ன கதை, ஞானக் குகை ஆகிய கதைகளே எழுதியவர் மாயா வாதியான புதுமைப் பித்தன். இவரைப் பற்றியும் நாம் வாய் திறக்கக் கூசுகிருேம்.

சாப விமோசனம், அன்று இரவு, அகல்யா ஆகிய புராணக் கதைகளைப் புது மெருகிட்டு எழுதிய புதுமைப் பித்தனைப் பற்றியும் தாம் வெளியே பேசுவதில்லை.

செல்லம்மாள், நினைவுப்பாதை. சித்தி, சிவ சிதம்பர சேவுகம் ஆகிய விரக்தி செறிந்த கதைகளே எழுதிய துறவி புது மைப் பித்தனைப் பற்றியும் நாம் மக்களுக்குத் துல்லியமாக எடுத்துரைப்பதில்லே.

அவர் ஒரு முரண்பாட்டுக் குவியல், அதாவது, ஒரு புதுமைப் பித்தனுக்குள் எத்தனையோ புதுமைப் பித்தர்கள் இருக்கிருர்

82 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/88&oldid=561169" இலிருந்து மீள்விக்கப்பட்டது