பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிக்கையும், ஆற்றலும் தான் அரிய பெரிய காரியங்களுக்கு அடிகோலுகின்றன; அற்புதங்களைச் சாதிக்கின்றன. மனித வரலாறு அனைத்துத் துறைகளிலும் சுட்டிக் காட்டுகிற ஒரு உண்மை இது. -

அதேபோல நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னுெரு உண்மையும் உண்டு.

தனி நபரின் உழைப்பும் உற்சாகமும் ஊக்கமும் திறமையும் அதேபோன்ற தன்மைகளை உடைய பலரைக் கவர்ந்திழுக் கின்றன. இவ்வாறு வந்து சேர்கிறவர்களின் ஆற்றலும் மனப் பூர்வமான ஒத்துழைப்பும் ஒருங்கு கூடுகிற போதுதான் எந்தச் சாதனையும் தனிச்சிறப்பும் பெரும் மதிப்பும் அடைய முடியும்.

பத்திரிகைகள் விஷயத்திலும் இது எவ்வளவுதூரம் நியாய மானது என்பதை மணிக்கொடி வரலாறு மட்டுமல்லாது, இத்தொடரில் நான் அறிமுகப்படுத்த விரும்புகிற இதர ஏடு களின் கதையும் நிரூபிக்கும்.

‘மணிக்கொடி ஐந்தாவது வருடத்தில் கூட்டு ஸ்தாபன முயற்சியாக உருவாயிற்று. அதிலிருந்து அந்தப் பத்திரிகை தனது தனித்தன்மையை இழக்கலாயிற்று, பத்திரிகையை வியாபார வெற்றியாக ஆக்கவேண்டும் என்ற நோக்குடன், புது அம்சங்களாக சினிமாப்படங்கள் பற்றிய கட்டுரைகளும், நடிகர் நடிகைகள் படங்களும், அரசியல் விவகாரங்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெறலாயின. 1938 ஆரம்பத்தில் பி.எஸ். ராமையா அதன் ஆசிரியப்பொறுப்பை விட்டுவிட்ட தும் - ப. ராமஸ்வாமி (ப. ரா.) அதன் நிர்வாகப் பொறுப் பை ஏற்றுக்கொண்ட பின்னர் மணிக்கொடி வேறுவிதமான வர்ணங்களைத் தாங்கிக் கொண்டது என்று சொல்லலாம்.

அதன் தனித் தன்மைக்குக் காரணமாக அமைந்த ஆற்றல் நிறைந்த படைப்பாளிகளின் சிருஷ்டிகள் அதனுடைய இதழ் களில் இடம்பெறவே இல்லே. அவற்றுக்குப் பதிலாக, டி.எஸ்.

已] வல்விக் கண்ணன் / 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/9&oldid=561089" இலிருந்து மீள்விக்கப்பட்டது