பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயத்தைக் கூறவேண்டாமா? அப்பொழுது தானே விவாதமிருக்கும். விஷயச் சுவையுமிருக்கும்! இல்லாவிட் டால் பிறவிக் குருடன் கும்மிருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடப் புறப்பட்ட மாதிரிதான் ஆகி விடும் விஷயம் குறியில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே யிருப்போம். அதுமட்டுமா? இன்னுெரு ஆபத்தும் இருக் கிறது. மற்ற எழுத்தாளர்களுக்கும் எதிராக புதுமைப் பித்தனை நிறுத்தி மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அதாக ரிகமும் ஏற்பட்டு விடலாம்' என்று அவர் எழுதியிருந்தார். அத்துடன் சரி. இதற்கு மேல் அந்த விவகாரம் வளர வில்லை.

மூன்ருவது ஆண்டில், சரஸ்வதி'யில் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் ஆபாசம்’ என்ற கூச்சலே அதிகம் எழுப்பின. பலப்பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் - ஆண்களும் பெண் களும் அவர் கதைகளில் எடுத்தாண்ட விஷயங்களையும் எழுத்தில் சித்தரித்த முறைகளையும் குறை கூறியும், கண் டித்தும், மாதம் தோறும் கடிதங்கள் எழுதி வந்தார்கள்.

பிளாட்பார வாசிகளான மருத முத்துவும் ரஞ்சிதமும் நே சித்து, திருமணம் புரிந்துகொண்டு புதுமண இன்பத்தை இரவில் அமைதியாக ஆனந்தத்தோடு அனுபவிக்க வசதி யும் இடமும் இல்லாமல் அவதிப்படுவதை, பூங்காவில் படுத்து இன்புற எண்ணிய அவர்கள் அனுபவிக்க நேர்ந்த சிறுமை களே உணர்ச்சிகரமாக விவரித்தது தாம்பத்யம் (பிப்ரவரி 1957) இளமையில், பணச்செருக்கில், தூய அன்பு காட்டித் தன்ன நெருங்கிய ஏழைப் பெண் ஒருத்தியின் காதலை விபசார நோக் கில் கருதி விலைக்குப் பெற விரும்பிய தணிகாசலத்தை, காதல் அவரது வாழ்வு முழுவதும் திரஸ்கரித்து விட்டது. காதலின் மாண்டை உணர்ந்து கொள்ள முடியாமல் போன அவர் தனது முதுமையில் ஒருநாள் அந்தப் பெண்ணேப்பற்றி எண்ணிக் கழிவிரக்கம் கொள்வதைச் சித்தரித்தது திரஸ்காரம் (மார்ச் 57)

I , வல்லிக்கண்ணன் , 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/91&oldid=561172" இலிருந்து மீள்விக்கப்பட்டது