உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சரிந்த சாம்ராஜ்யங்கள்


 கிழவியின் அழுகுரல் மட்டிலும் கேட்க, நகரப் பரிசோதகன் கதவைத்தட்ட, அழுகையை நிறுத்தி அந்தப் பெரியவள் கதவைத் திறக்க, எங்கள் மன்னன் மானத்தை வாங்கவா இப்படி பெருங்குரலிட்டு அழுது கொண்டிருக்கின்றாய் என்று வந்த வேட்டைநாய் அந்த முதியவள் வாயில் குத்த, அடுத்த வினாடியே அவளும் பிணமாய்ச் சாக, அதைத் தங்கள் அதிர்ஷ்டமென நினைத்து வீட்டிலிருந்ததை வந்தவர்கள் சுருட்ட, விடிகிற வரையிலும்யாரும் அந்த வீட்டையணுகாமலிருக்க, வேந்தனிடம் இந்த விவகாரம் வழக்காக நிற்க, விலா வெடிக்கச் சிரித்துவிட்டு தன் பஞ்சணைக்குச் சென்றுவிட்ட பாதகர்கள்.

மக்கள் செலுத்தும் வரியிலேயே மருந்துகளையும் குண்டுகளையும் வாங்கி அதே மக்களை அதே ஆயுதங்களால் அடக்கியாண்ட சேனைத் தலைவர்கள். தீரர்களுக்கும் தீயர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் தீ மிதித்தவர் போலாடிய தறுக்கர்கள், தன்னையாதரித்தவனை வஞ்சனையால் கொன்று குவிக்க எதிரிகளுக்கு இருட்டில் ஆயுதங்களைக் கொடுத்துதவிய அற்பர்கள், உள் நாட்டில் புகப் பாதை தெரியாமல் திகைத்தப் பகைவரிடம் பேரம்பேசி பாதையைக் காட்டிய பாதகர்கள், ஜெகத்தைக் கட்டியாள தன் படைகள் புடைசூழ வந்த ஜென்ம விரோதிகளுக்கு துவஜாரோகணம் தூக்கிய ஜெகஜாலப் புரட்டர்கள். ஜெமீன்கள், இனாம்கள், சங்கீதத்தால் செங்கோலைத் தன் வசப்படுத்த ஜெகன் மோகினிகளைப் பந்தயப் பொருளாக வைத்து தூது சொக்கட்டானாடிய சோற்றுத் துருத்திகள், மோகனப் புன்னகையால் மன்னர்களின் சித்தத்தைச் சண்டைக் கிழுத்துத் தங்கள் காமக் கோடரியால் மன்னனின் சிரத்தை வெட்டி வீழ்த்தி சதி செய்த சண்டாளிகளின் பாதம்