உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

7


தாங்கிகள். அவன் ஏன் மன்னன்; நான் ஏன் மந்திரி நானே மன்னன் என்று பிரகடனப்படுத்திய அமைச்சனை வஞ்சம் தீர்க்கும் வெறியில் எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து எல்லாவற்றையும் இழந்து விட்ட ஏமாந்த சோணகிரிகள்.

நாட்டில் பஞ்சம் அதிகம், ஆகவே என் தந்கை செய்த சட்டங்களே நான் மாற்றுகிறேன். இனி சதுர் வேதி மங்கலங்கள், தரும ஸ்தாபனங்கள் செல்லாது என திருத்தஞ் செய்த தார்வேந்தர்களையொழிக்கப் பெண்களையேவிய புரோகிதக் கூட்டங்கள். அண்ணன் அரசைத் தம்பிக்கும், தம்பியின் உரிமையை மாற்றானுக்கும் ஆக்கி உளம் களித்த உதிரப் பிண்டங்கள்.

தந்தையை இப்படையிலும், தனையனை அப்படையிலும் நிறுத்தி வேடிக்கைப் பார்த்து உருளும் தலைகள் மேல் நின்று வெற்றிச் சங்கமுழங்கிய வீணர்கள், அவர்களுடைய அடாதச் செயலுக்கு ஒத்துதிய வேதியர்கள் அன்னமிட்டுக் காப்பாற்றியவனுக்கே ஐந்தாம் படை வேலை செய்துத் தங்கள் பஞ்சாங்கத்தின் அட்டைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்ட இரத்தம் உருஞ்சும் அட்டைகள்.

அரசபோகம் தனக்கும் வேண்டுமென்ற பேராசையால் எழுப்பிய அஜமேக யாகத்தின் புகை, அஸ்வமேத யாகத்தில் இரு துண்டாக்கப்பட்ட குதிரை, மண்டலத்தை ஒழிக்கிறேன் என்று குள் உரைத்து அவிழ்த்து விடப்பட்ட குடுமி, சோமபானத்தால் ஏற்பட்ட போதை, ஆற்றங்கரைகளிலே போடப்பட்ட தவளைக் கூச்சல், பல யாககுண்டங்களின் முன்னால் நிறுத்தி வெட்டப்பட்ட ஆடுகளின், உதிர்ந்த ரோமங்